சர்வதேச பங்குச் சந்தைகளின் மந்தமான வர்த்தகம், கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் தொடர்ச்சியாக வெளிநாட்டு அன்னிய முதலீட்டாளர்களின் பங்கு விற்பனை ஆகியவற்றால் இந்திய பங்குசந்தை வியாழக்கிழமை பெரிய அளவிலான சரிவை எட்டியுள்ளது.
மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு யாரும் எதிர்பார்க்காத வகையில் இன்று காலை வர்த்தகம் துவங்கியதில் இருந்து மெல்ல மெல்ல சரிந்து ஆசிய சந்தையும் கைகொடுக்காமல், ஐரோப்பிய சந்தையும் கைகொடுக்காமல் சென்செக்ஸ் சுமார் 610 புள்ளிகள் சரிந்து 65508.32 புள்ளிகளை அடைந்தது.

இதேபோல் அன்னிய முதலீட்டார்களின் தொடர் விற்பனையும், அமெரிக்க பத்திர சந்தையில் அதிகப்படியான லாப அளவுகளும் , அதே நேரத்தில் Nifty50 குறியீடு 192.90 புள்ளிகள் சரிந்து 19,523.55 புள்ளிகளை எட்டி முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.
இன்றைய பங்குச்சந்தை ரத்தக்களரியில் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட அனைத்து நிறுவனங்களின் சந்தை மூலதனம் 2.55 லட்சம் கோடி ரூபாய் குறைந்து 317.05 லட்சம் கோடி ரூபாயாக குறைந்து முதலீட்டாளர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் டெக் மஹிந்திரா, ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் விப்ரோ ஆகியவை 2 - 4 சதவீதம் வரையில் வீழ்ச்சியடைந்து மோசமாக பாதிப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்தகு கோடக் மஹிந்திரா, பஜாஜ் ஃபின்சர்வ், இன்ஃபோசிஸ் மற்றும் ஐடிசி ஆகியவையும் சரிந்தன.
சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் வெறும் 5 நிறுவனங்கள் மட்டுமே உயர்வுடன் காணப்பட்டது. இதில் எல்&டி, ஆக்சிஸ் வங்கி, பார்தி ஏர்டெல், பவர் கிரிட் மற்றும் எஸ்பிஐ ஆகியவை உயர்வுடன் இருந்தன.
மேலும் நிஃப்டி ஸ்மால்கேப்100 0.4 சதவீதமும், நிஃப்டி மிட்கேப்100 0.3 சதவீதமும் சரிந்தன. இன்றைய பங்குச்சந்தை சரிவுக்கு முக்கியமான காரணம் ஒரே நாளில் 3 சதவீதம் வரையில் உயர்ந்துள்ள கச்சா எண்ணெய் விலை தான். உலகின் மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதியாளரான இந்தியாவை இந்த விலை உயர்வு கட்டாயம் பாதிக்கும் என்று சந்தை ஆய்வாளர்கள் கூறியது போலவே நடந்துள்ளது.


Click it and Unblock the Notifications