சென்னை: பொதுத் தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1 ஆம் தேதி நடக்க உள்ள வேளையில், ஜூன் 4ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
தற்போது சந்தையில் வெளியாகியுள்ள கருத்துக்கணிப்புக்களில் கலவையான முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளதால், பெரும்பாலான துறைகளில் பங்குகள் விற்பனை செய்யப்பட்டு இந்தியப் பங்குச்சந்தை வியாழக்கிழமை பெரும் சரிவைச் சந்தித்தன.

மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று அதிகப்படியாக 73,668.73 புள்ளிகளைத் தொட்டது, இதன் மூலம் ஒரே நாளில் சுமார் 800 புள்ளிகள் அல்லது 1% சரிந்துள்ளது. அதேபோல், நிஃப்டி குறியீடு 22,459.15 என்ற மோசமான நிலைக்கு இன்று தள்ளப்பட்டு, ஒரே நாளில் 250 புள்ளிகள் அல்லது 1% வரையல் சரிந்தது.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி முடிவு: சென்செக்ஸ் குறியீடு இன்று வர்த்தகம் முடிவில் 617.30 புள்ளிகள் சரிந்து 73,885.60 என்ற நிலையில் முடிந்தது. இதேபோல் நிஃப்டி 50 குறியீடு 216.05 புள்ளிகள் சரிந்து 22,488.65 என்ற நிலையில் முடிவடைந்தது.
தொடர் சரிவு: வியாழக்கிழமை சரிவுடன் சென்செக்ஸ், நிப்டி குறியீடுகள் தொடர்ந்து ஐந்தாவது நாளாகச் சரிந்துள்ளது.
மூலதனக் குறைவு: இதன் மூலம் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட அனைத்து நிறுவனங்களின் சந்தை மூலதனம் 4.49 லட்சம் கோடி குறைந்து 410,71,639.09 கோடியாக குறைந்துள்ளது.
சரிவுக்கான முக்கிய காரணங்கள்: இந்த சரிவுக்குப் பின்னணியில் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் முதன்மையான 5 காரணங்களைப் பார்ப்போம்:
பெரிய நிறுவனங்களின் சரிவு: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (RIL), இன்ஃபோசிஸ் மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) போன்ற முன்னணி நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்ததே சந்தை சரிவுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. கடந்த ஒரு வாரத்தில் ப்ளூ சிப் பங்குகளில் அதிகப்படியான முதலீடுகளைப் பெற்ற நிலையில் இன்று அதிகப்படியான விற்பனை பதிவாகியுள்ளது.
தேர்தல் தடுமாற்றம்: ஜூன் 1 ஆம் தேதி சனிக்கிழமையன்று கடைசிக் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், ஜூன் 4ஆம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகள் எந்த அளவுக்கு பங்குச்சந்தையைப் பாதிக்கும் எனக் கணிக்கப்பட்டு வருகிறது.
இது சந்தை முதலீட்டாளர்களுக்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, ஜூன் 1 ஆம் தேதி இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த பின்னர், சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் எக்சிட் போல் முடிவுகள் வெளியாகத் தொடங்கும்.
தற்போதைய மோடி தலைமையிலான NDA அரசாங்கத்திற்குச் சாதகமாக முடிவு இல்லாவிட்டால், பங்குச்சந்தை 10-15% சரிவை எதிர்கொள்ளும் என கணிக்கப்பட்டு உள்ளது.
F&O காலாவதி: வியாழக்கிழமை அன்று F&O மாதாந்திர நிஃப்டி பியூச்சர்ஸ் ஒப்பந்தங்கள் காலாவதியாகும் மற்றும் வர்த்தகர்கள் தங்கள் நிலைகளை லாபகரமாக மாற்ற அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.
அமெரிக்கச் சந்தை முடிவுகள்: அமெரிக்காவில் ஜிடிபி கணிப்புகள் வெளியாகும் வேளையில், வட்டி விகிதம் குறைப்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருவதால் இந்த நிலையற்ற சந்தையில் முதலீடு செய்வதைக் கட்டிலும் பத்திர சந்தையில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் பெட்டியைக் கட்டினர்.
ஆசிய சந்தை: அமெரிக்க பங்குச்சந்தை சரிவால் ஆசிய சந்தையும் இன்று பெரும் சரிவை எதிர்கொண்டது. இதன் வாயிலாக இந்திய சந்தையும் பாதிக்கப்பட்டது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications