பட்ஜெட்டுக்கு பின் 1250 புள்ளிகள் சரிந்த Sensex! 400 புள்ளி இறக்கத்தில் பலத்த அடி வாங்கிய Nifty!

மும்பை: இன்று காலை சென்செக்ஸ் 39,476 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி இறக்கம் கண்டு 38,720 புள்ளிகளில் நிறைவடைந்திருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை, பட்ஜெட் தினத்தன்று மாலை சுமார் 470 புள்ளிகள் இறக்கம் கண்டு சென்செக்ஸ் 39,513-க்கு நிறைவடைந்தது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 792 புள்ளிகள் கூடுதலாக சரிந்திருக்கிறது.

அதே போல் நிஃப்டி50 இண்டெக்ஸ் காலை 11,770 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 11,558 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. கடந்த வெள்ளிக்கிழமை, பட்ஜெட் தினத்தன்று மாலை சுமார் 150 புள்ளிகள் சரிந்து வர்த்தக நேர முடிவில் நிஃப்டி 11,811 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 252 புள்ளிகள் கூடுதலாக சரிந்திருக்கிறது

பட்ஜெட்டுக்கு பின் 1250 புள்ளிகள் சரிந்த Sensex! 400 புள்ளி இறக்கத்தில் பலத்த அடி வாங்கிய Nifty!

இன்று சென்செக்ஸில் வர்த்தகமான 30 பங்குகளில் 27 பங்குகள் இறக்கத்திலும், 03 பங்குகள் ஏற்றத்திலும் வர்த்தகமாயின. இன்று நிஃப்டியில் வர்த்தகமான 50 பங்குகளில் 45 பங்குகள் இறக்கத்திலும், 05 பங்குகள் ஏற்றத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,669 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 571 பங்குகள் ஏற்றத்திலும், 1,954 பங்குகள் இறக்கத்திலும், 144 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்தம் 2,669 பங்குகளில் 31 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 314 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.

இன்று நிஃப்டியில் அனைத்து துறை சார்ந்த பங்குகளும் இறக்கத்தில் வர்த்தகமாயின. அதிகபட்சமாக பொதுத் துறை வங்கிகள், இன்ஃப்ராஸ்ட்ரக்சர், மீடியா, பொதுத் துறை நிறுவனங்கள் போன்ற துறை சார் பங்குகள் அதிக இறக்கத்தில் வர்த்தகமாயின. இன்று வர்த்தக நேரத்தில் யெஸ் பேங்க், பஜாஜ் ஃபின்சர்வ், மாருதி சுஸிகி, எஸ் பி ஐ, ஹெச்டிஎஃப்சி பேங்க் போன்ற பங்குகள் அதிக வால்யூம்களில் வர்த்தகமாயின.

யெஸ் பேங்க், ஹெச் சி எல் டெக், பார்தி இன்ஃப்ராடெல், டிசிஎஸ் போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின. பஜாஜ் ஃபின்சர்வ், பஜாஜ் ஃபைனான்ஸ், ஓஎன்ஜிசி, ஐஓசி, இந்தியாபுல்ஸ் ஹவுசிங் போன்ற நிறுவனப் பங்குகள் சுமார் 2.50 சதவிகித விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.

ஜூலை 05, 2019-ல் அமெரிக்க சந்தையான நாஸ்டாக் -0.10% வர்த்தகமாகி நிறைவடைந்திருக்கிறது. அதோடு இன்று ஜூலை 08, 2019-ல் ஐரோப்பிய சந்தைகளில் லண்டனின் எஃப்.டி.எஸ்.இ -0.11%, பிரான்சின் சி ஏ சி --0.14% , ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் -0.11% வர்த்தகமாகி வருகின்றன. ஆசிய பங்குச் சந்தைகள் அனைத்தும் இன்றும் இறக்கத்தில் தான் வர்த்தகமாயின. அதிகபட்சமாக தென் கொரியாவின் கோஸ்பி -2.20 % இறக்கத்தில் வர்த்தகமாயின. அதனைத் தொடர்ந்து சீனாவின் ஷாங்காய் காம்போசைட் -2.58 சதவிகிதம் இறக்கத்தில் வர்த்தகமாயின.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 68.69 ரூபாய்க்கு வர்த்தகமாகி நிறைவடைந்திருக்கிறது. ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 64.31 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+