டாலர் மதிப்பு கடந்த 5 நாட்களாக தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் வேளையில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் தொடர்ந்து இந்திய சந்தையில் முதலீடு செய்து வரும் வேளையில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் அதிகப்படியான பங்குகளை விற்பனை செய்து லாபம் பார்த்து வரும் காரணத்தால் மும்பை பங்குச்சந்தை சரிவில் உள்ளது.
மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு கடந்த இரண்டு வர்த்தக நாட்களில் சுமார் 900 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது, சிறிய பங்கு முதலீட்டாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 371.83 புள்ளிகள் சரிந்து 61,560.64 புள்ளிகளை எட்டியுள்ளது. இன்று அதிகப்படியாக சென்செக்ஸ் 61,340 புள்ளிகளை எட்டியுள்ளது, மே 15 ஆம் தேதி 62,517.01 புள்ளிகளை அடைந்த நிலையில், 3 நாட்களில் 1177.01 புள்ளிகளை இழந்துள்ளது.
சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் இன்டஸ்இந்த் அதிகப்படியாக 1.27 சதவீதம் வரையில் உயர்ந்தது. ஐடிசி, பார்தி ஏர்டெஸ், மாருதி சுசூகி, அல்டராடெக், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, எஸ்பிஐ ஆகியவை சரிவில் இருந்து தப்பித்தது.
டைட்டன், பஜாஜ் பைனான்ஸ், டாடா மோட்டார்ஸ், விப்ரோ, டாடா ஸ்டீல், இன்போசிஸ், ஏசியன் பெயின்ட்ஸ், டிசிஎஸ், ஹெச்சிஎல் டெக், கோட்டாக் மஹிந்திரா வங்கி ஆகியவை 1 சதவீதத்திற்கும் அதிகமான சரிவை பதிவு செய்துள்ளது.

அமெரிக்காவில் கடன் உச்சவரம்பு பேச்சுவார்த்தைகள் மற்றும் டாலர் குறியீட்டின் அதிகரிப்பு ஆகியவை பற்றிய கவலைகளுக்கு மத்தியில் உலகளாவிய சந்தைகள் பலவீனம் முதலீட்டு சூழ்நிலையை எதிர்கொண்டு வருகிறது. இது உள்நாட்டு பங்குகளை வீழ்ச்சியடையச் செய்யும் முக்கிய காரணியாகும்.
சர்வதேச பங்குச்சந்தை மந்தமான வர்த்தக சூழ்நிலையில் ஜப்பான் நாட்டில் நடக்க உள்ள G7 மாநாடு கச்சா எண்ணெய் சந்தையில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்த உள்ளதாக கணிக்கப்பட்டு உள்ளது. இந்த மாநாட்டில் ரஷ்யாவுக்கு எதிரான சில முக்கிய வர்த்தக தடைகள் விதிக்கப்பட்டு உள்ளது.
ஜி7 நாடுகள் பல்வேறு தடைகளை விதிக்கப்பட்ட பின்பும் தற்போது ரஷ்யா தடை உத்தரவுகளை மீறாத வகையில் தொடர்ந்து உலகின் பல்வேறு நாடுகள் உடன் வர்த்தகம் செய்து வருகிறது. இந்த நிலையில் புதிய தடைகளை விதித்து ரஷ்யாவை ஒட்டுமொத்தமாக ஒடுக்க திட்டமிட்டு வருகிறது ஜி7 நாடுகள்.
இதேவேளையில் டாலர் மதிப்பு மே 6 ஆம் தேதி முதல் தொடர்ந்து வலிமை அடைந்து வருவதால் இறக்குமதி செய்யப்படும் தங்கம் விலை அதிகரித்தாலும், நிலையான முதலீட்டு சந்தை காரணமாக சர்வதேச சந்தையில் தங்கம் விலை பெரிய அளவிலான சரிவை பதிவு செய்த காரணத்தால் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பின் உயர்வின் மூலம் எவ்விதமான அதிரடி உயர்வும் இல்லாமல் தங்கம் உள்ளது.


Click it and Unblock the Notifications