வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்றும் இந்திய சந்தைகள் தொடக்கத்திலேயே சற்று தடுமாற்றத்தில் தான் காணப்பட்டது.
இன்னும் இதனை தெளிவாக சொல்லவேண்டுமானால், இன்று காலை ப்ரீ ஓபனிங் சந்தையில் சென்செக்ஸ் சற்று குறைந்தும், நிஃப்டி சற்று அதிகரித்தும் காணப்பட்டது. எனினும் தொடக்கத்தில் சற்று ஏற்றத்தில் காணப்பட்டாலும், தற்போது வரையில் சரிவில் தான் காணப்படுகிறது.
குறிப்பாக தற்போது சென்செக்ஸ் 1222 புள்ளிகள் குறைந்து, 49,667.76 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 328.75 புள்ளிகள் குறைந்து 14,653 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.
அமெரிக்க பத்திர சந்தைகள் தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வருவது ஒரு புறம் நலல் விஷயமாக பார்க்கப்பட்டாலும், மறுபுறம் பணவீக்கம் அதிகரிக்க வழிவகுக்குமோ என்ற உணர்வும் நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் பங்கு சந்தைகள் சரிவில் காணப்படுகின்றன.
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள, பெரும்பாலான குறியீடுகள் சிவப்பு நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள அதானி போர்ட்ஸ், ஜேஎஸ்டபள்யூ ஸ்டீல், ஹிண்டால் கோ, டாடா ஸ்டீல், ஒஎன்ஜிசி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே டெக் மகேந்திரா, எம் & எம், டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஒஎன்ஜிசி, ஹெச்டிஎஃப்சி வங்கி, கோடக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே டெக் மகேந்திரா, டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், எம் & எம், ஆக்ஸிஸ் வங்கி, இந்தஸிந்த் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.