நடப்பு வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் சற்று சரிவில் தான் காணப்படுகின்றன. இது கடந்த வாரத்தில் இருந்து தொடர்ச்சியாக ஏற்ற இறக்கத்தினை கண்டு வரும் நிலையில், இன்றும் மீண்டும் சரிவினைக் காணத் தொடங்கியுள்ளது.
அமெரிக்க பங்கு சந்தைகள் ஏற்றத்தில் முடிவடைந்திருந்தாலும், இன்று காலை தொடக்கத்தில் ஆசிய சந்தைகள் பலவும் சரிவிலேயே தொடங்கின. இதன் எதிரொலியாக இந்திய சந்தையும் சற்று சரிவில் காணப்படுகிறது.
இது பணவீக்கம் பற்றிய கவலைகள், தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா உள்ளிட்ட பல காரணிகளினால் சரிவில் காணப்படுகிறது.
என்ன காரணம்
தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனாவின் தாக்கம், பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்ற கவலையும் ஏற்படுத்தியுள்ளது. அதோடு சர்வதேச காரணிகள் பலவும் சந்தைக்கு எதிராக அமைந்துள்ளது. இதற்கிடையில் தான் சந்தைகள் தற்போது குறைந்து பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகிறது.
இந்திய சந்தைகள் தொடக்கம்
குறிப்பாக இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று தடுமாற்றத்தில் தான் காணப்பட்டது. இதையடுத்து தொடக்கத்திலும் சற்று சரிவில் காணப்பட்டன. சென்செக்ஸ் 434.39 புள்ளிகள் குறைந்து, 49,068.02 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 143.10 புள்ளிகள் குறைந்து, 14,799.30 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
நிஃப்டி குறியீடு
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பல குறியீடுகளும் சிவப்பு நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள கோல் இந்தியா, ஐஓசி, சன் பார்மா, அதானி போர்ட்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஹிண்டால்கோ, ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல், ஹெச்.டி.எஃப்.சி, கோடக் மகேந்திரா, பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள சன் பார்மா, அல்ட்ராடெக் சிமெண்ட், என்.டி.பிசி, ஐடிசி, பவர் கிரிட் கார்ப் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ஹெச்.டிஎஃப்.சி, கோடக் மகேந்திரா, டெக் மகேந்திரா, பஜாஜ் பைனான்ஸ், மாருதி சுசூகி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பானது 13 பைசா குறைந்து, 73.48 ரூபாயாக சரிவினை கண்டுள்ளது. இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 414.74 புள்ளிகள் குறைந்து, 49,087.67 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 112.80 புள்ளிகள் குறைந்து, 14,829.55 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications