நடப்பு வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் சற்று சரிவில் தான் காணப்படுகின்றன. இது கடந்த வாரத்தில் இருந்து தொடர்ச்சியாக ஏற்ற இறக்கத்தினை கண்டு வரும் நிலையில், இன்று சற்று சரிவினைக் காணத் தொடங்கியுள்ளது.
அமெரிக்க டாலரின் மதிப்பு சற்று குறைந்துள்ள நிலையில், பங்கு சந்தைகள் சற்று சரிவில் காணப்படுகின்றன. இதனையடுத்து இன்று ஆசிய பங்கு சந்தைகளும் சற்று தடுமாற்றத்தில் காணப்படுகின்றன.
இதனையடுத்து இந்திய பங்கு சந்தைகளும் தொடக்கத்தில் சற்று ஏற்றத்தில் காணப்பட்ட நிலையில், தற்போது சற்று சரிவில் காணப்படுகின்றன.
என்ன காரணம்
அதோடு பணவீக்கம் பற்றிய கவலைகள், கொரோனா உள்ளிட்ட பல காரணிகளினால் சந்தை சரிவில் காணப்படுகிறது. மேலும் பல சர்வதேச காரணிகள் பலவும் சந்தைக்கு எதிராக அமைந்துள்ளது. இதற்கிடையில் தான் சந்தைகள் தற்போது குறைந்து பெரியளவில் மாற்றமின்றி சற்று குறைந்து காணப்படுகிறது.
இந்திய சந்தைகள் தொடக்கம்
குறிப்பாக இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று தடுமாற்றத்தில் தான் காணப்பட்டது. சென்செக்ஸ் 42.72 புள்ளிகள் அதிகரித்து, 52,371.23 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 9 புள்ளிகள் அதிகரித்து, 15,742.70 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதையடுத்து தொடக்கத்திலும் சற்று ஏற்றத்தில் காணப்பட்டது. சென்செக்ஸ் 16.04 புள்ளிகள் அதிகரித்து, 52,344.55 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 2.50 புள்ளிகள் அதிகரித்து, 15,754.20 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதையடுத்து 1460 பங்குகள் ஏற்றத்திலும், 328 பங்குகள் சரிவிலும் 67 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்படுகிறது.
நிஃப்டி குறியீடு
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பல குறியீடுகளும் சிவப்பு நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள டெக் மகேந்திரா, இன்ஃபோசிஸ், பிரிட்டானியா, ஹெச்,சி.எல் டெக், டாடா கன்சியூமஸ் புராடக்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஹிண்டால்கோ, ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல், டாடா ஸ்டீல், எஸ்பிஐ, கோல் இந்தியா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டெக் மகேந்திரா, இன்ஃபோசிஸ், ஹெச்.சி.எல் டெக், டிசிஎஸ், லார்சன் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே எஸ்பிஐ, ஓ.என்.ஜி.சி, அல்ட்ராடெக் சிமெண்ட், கோடக் மகேந்திரா, இந்தஸிந்த் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பானது 72.78 ரூபாயாக தொடங்கியுள்ளது. இது முந்தைய அமர்வின் 72.81 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 85.08 புள்ளிகள் குறைந்து, 52,243.43 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 36.35 புள்ளிகள் குறைந்து, 15,715.30 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

வீட்டிலிருந்தே பிசினஸ்.. கைநிறைய சம்பாத்தியம்!மாதம் லட்சங்களில் வருமானம் ஈட்டக்கூடிய சூப்பர் ஐடியா!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

நாளை பங்குச் சந்தை ஏற்றம் காணுமா? சரியுமா? சந்தையை தீர்மானிக்கப் போகும் 3 முக்கிய காரணிகள்?



Click it and Unblock the Notifications