2023 ஆம் ஆண்டின் முதல் வார வர்த்தகம் பெரும் சரிவுடன் முடிந்துள்ளது. வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் நிஃப்டி குறியீடு 132.70 புள்ளிகள் அதாவது 0.75% சரிந்து 17,859.45 புள்ளிகளை எட்டியுள்ளது.
இதேபோல் சென்செக்ஸ் குறியீடு 450 புள்ளிகள் குறைந்து 59,900 புள்ளிகளை எட்டியுள்ளது.
வர்த்தகத்தின் கடைசி ஒரு மணிநேரத்தில் பெரும் முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்த நிலையில் நிஃப்டி அதன் இன்ட்ராடே குறைந்தபட்ச அளவில் இருந்து கிட்டத்தட்ட 70 புள்ளிகள் உயர்ந்தது, அதே நேரத்தில் சென்செக்ஸ் 260 புள்ளிகள் உயர்ந்தது.
2 லட்சம் கோடி ரூபாய்
சென்செக்ஸ் குறியீடு இன்று அதிகப்படியாக 59,669.91 புள்ளிகளை எட்டியதுள்ளது, இதேபோல் நிஃப்டி அதிகப்படியாக 17,795.55 புள்ளிகளை எட்டியுள்ளது. இன்றைய வர்த்தகத்தில் மட்டும் இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் சுமார் 2 லட்சம் கோடி ரூபாயை அளவிலான முதலீட்டு மதிப்பை இழந்தனர்.
சென்செக்ஸ், நிஃப்டி
ஆசிய சந்தைகளின் வர்த்தகம் இன்று இந்திய சந்தைக்கு சாதகமாக அமைந்த காரணத்தால் வர்த்தகம் துவங்கினாலும் சில நிமிடத்திலேயே சரிய துவங்கியது. சென்செக்ஸ் குறியீடு 450 புள்ளிகள் குறைந்து 59,900 புள்ளிகளை எட்டியது மட்டும் அல்லாமல் சென்செக்ஸ் குறியீடு இன்று அதிகப்படியாக 59,669.91 புள்ளிகளுக்கு சரிந்தது.
டாப் 30 நிறுவனங்கள்
2 நாளாக சரிந்து வரும் சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் லார்சன் & டூப்ரோ, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐடிசி, நெஸ்லே, மஹிந்திரா ஆகியவை உயர்வுடன் முடிந்த நிலையில் டாடா ஸ்டீல், ஹிந்துஸ்தான் யூனிலீவர், டைட்டன், விப்ரோ, பார்தி ஏர்டெல், பஜாஜ் ஃபின்சர்வ், இண்டஸ்இண்ட் வங்கி, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா, ஐசிஐசிஐ வங்கி மற்றும் எச்டிஎஃப்சி ஆகியவை சரிவை சந்தித்தது.
ஆசியா சந்தை
ஆசியா சந்தையில் இன்று சியோல், டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங்கில் பங்குச் சந்தைகள் உயர்வுடன் முடிந்த நிலையிலும் மும்பை பங்குச்சந்தை சரிவுடன் முடிந்துள்ளது. முக்கியமான சப்போர்ட் அளவுகளை சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இழந்துள்ளது.
அமெரிக்க சந்தை
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டின் இன்றைய சரிவுக்கு, வியாழக்கிழமை அமெரிக்க சந்தைகள் சரிவுடன் முடிந்ததும் முக்கிய காரணமாக உள்ளது. வியாழன் அன்று பிஎஸ்இ பெஞ்ச்மார்க் 304.18 புள்ளிகள் குறைந்து 60,353.27 ஆக முடிந்தது. நிஃப்டி 50.80 புள்ளிகள் சரிந்து 17,992.15 இல் முடிந்தது.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள்
இன்று சர்வதேச கச்சா எண்ணெய் பெஞ்ச்மார்க் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 1.23 சதவீதம் உயர்ந்து 79.66 அமெரிக்க டாலராக உள்ளது. இதேபோல் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) வியாழக்கிழமை வர்த்தகத்தில் மட்டும் 1,449.45 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications