2024 பொதுத் தேர்தல் முடிந்து இன்று காலை வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாகத் துவங்கியிருக்கும் வேளையில், தபால் வாக்குகளின் எண்ணிக்கை முடிந்து EVM வாக்கு எண்ணிக்கை துவங்கியது. ஆரம்பக்கட்ட வாக்கு எண்ணிக்கையைப் பார்க்கும் போதும் இந்தியா கூட்டணி முன்னிலையில் உள்ளது.
இது எக்ஸிட் போல் முடிவுகளுக்கும், வாக்கு எண்ணிக்கை முடிவுகளுக்கு நேர் எதிராக இருக்கும் காரணத்தால் செவ்வாய்க்கிழமையன்று உள்நாட்டுப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு அதிரடியாகக் குறைந்துள்ளது.

குறிப்பாக நரேந்திர மோடி தனது தொகுதியில் பின்னடைவை சந்திக்கிறார் என்ற செய்தி வெளியானதில் இருந்து பங்குச்சந்தை ரத்தகளரியானது. இந்தியா கூட்டணி எதிர்பார்த்ததை விட சிறந்த செயல்திறனை ஆரம்பக் கட்ட வாக்கு எண்ணிக்கையில் காட்டத் துவங்கியுள்ளதே இதற்கு முக்கியமான காரணமாகும்.
இந்தியாவில் ஆட்சி மாற்றம் நடந்தால் பெரும் பாதிப்பு வரும் என எதிர்பார்த்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கிடைத்த வரையில் லாபம் போதும் என்ற நிலைமைக்கு வந்தது மட்டும் அல்லாமல் பங்குகளை விற்கத் துவங்கியுள்ளனர்.
இன்று காலை வர்த்தக துவக்கத்தில் சென்செக்ஸ் குறியீடு சுமார் 2700 புள்ளிகளுக்கும் அதிகமாகச் சரிந்துள்ளது. சில நிமிடத்தில் கணிசமாக மீண்டு வந்தாலும் தொடர்ந்து 2000 புள்ளிகளுக்கும் அதிகமான சரிவிலேயே உள்ளது. 9.45 மணியளவில் சென்செக்ஸ் குறியீடு 2069 புள்ளிகள் சரிந்து 74,296.54 புள்ளிகளில் உள்ளது.
இதேபோல் நிஃப்டி குறியீடு 661.40 புள்ளிகள் சரிந்து 22.602 புள்ளிகளை அடைந்துள்ளது. காலை வர்த்தகத்தில் சென்செக்ஸ் அதிகப்படியாக 73,659.29 புள்ளிகள் வரையில் சரிந்துள்ளது. இதேபோல் நிஃப்டி குறியீடு 22,566.95 புள்ளிகள் சரிந்துள்ளது.
இந்தியப் பங்குச் சந்தையில் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து முதலீட்டாளர்கள் எப்போதும் கவலைப்படுவதுண்டு. கடந்த நான்கு தேர்தல் முடிவுகளின் நாளில் பங்குச் சந்தையில் நிலவிய சூழ்நிலையை இங்கே பார்ப்போம்.
மே 13, 2004
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் முறையே 0.77 சதவீதம் மற்றும் 0.37 சதவீதம் உயர்ந்து 5,399.47 மற்றும் 1,717.5 புள்ளிகளில் முடிந்தன.
சென்செக்ஸ் இன்டிராடே உயர்வு: 5,487.34 | சென்செக்ஸ் இன்டிராடே தாழ்வு: 5,131.03
நிஃப்டி இன்டிராடே உயர்வு: 1,750.30 | நிஃப்டி இன்டிராடே தாழ்வு: 1,625.10
மே 16, 2009
சென்செக்ஸ் குறியீடு 2.53 சதவீதம் உயர்ந்தது. அதே நேரத்தில், நிஃப்டி குறியீடு 17.74 சதவீதம் உயர்ந்து முறையே 12,173.42 மற்றும் 4,323.15 புள்ளிகளில் முடிந்தன.
சென்செக்ஸ் இன்டிராடே உயர்வு: 14,284.21 | சென்செக்ஸ் இன்டிராடே தாழ்வு: 13,479.39
நிஃப்டி இன்டிராடே உயர்வு: 4384.30 | நிஃப்டி இன்டிராடே தாழ்வு: 3673.15
மே 16, 2014
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் முறையே 0.90 சதவீதம் மற்றும் 1.12 சதவீதம் ஓரளவு உயர்ந்து முறையே 24,121.74 மற்றும் 7,203 புள்ளிகளில் முடிந்தன.
சென்செக்ஸ் இன்டிராடே உயர்வு: 25,375.63 | சென்செக்ஸ் இன்டிராடே தாழ்வு: 23,873.16
நிஃப்டி இன்டிராடே உயர்வு: 7,563.50 | நிஃப்டி இன்டிராடே தாழ்வு: 7,130.65
மே 23, 2019
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இரண்டுமே கிட்டத்தட்ட நிலையாக இருந்தன, சென்செக்ஸ் 0.76 சதவீதமும் மற்றும் நிஃப்டி 0.69 சதவீதமும் சரிந்து முறையே 38,811.39 மற்றும் 11,657.05 புள்ளிகளில் முடிந்தன.
சென்செக்ஸ் இன்டிராடே உயர்வு: 40,124.96 | சென்செக்ஸ் இன்டிராடே தாழ்வு: 38,651.61
நிஃப்டி இன்டிராடே உயர்வு: 12,041.15 | நிஃப்டி இன்டிராடே தாழ்வு: 11,614.5
More From GoodReturns

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!



Click it and Unblock the Notifications