மும்பை: வாரத்தின் முதல் நாளான இன்றே இந்திய பங்கு சந்தை சரிவுடன் ஆரம்பித்துள்ளது. அதிலும் கொஞ்சம் நஞ்சம் வீழ்ச்சியல்ல.
மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் (10 மணியளவில்) 1,478 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 36,098 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது.
இதே தேசிய பங்கு சந்தையின் நிஃப்டி 414 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 10,574 ஆகவும் வர்த்தகமாகி வருகிறது.
ரூபாய் மதிப்பு வீழ்ச்சி
இதே அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 73.97 ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது. நாடு முழுவதும் வேகமாக பரவி கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்று வரையில் 38 பேர் இதனால் தாக்கம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தாக்கம் காரணமான, முதலீட்டாளர்கள் மத்தியில் பெரிய அளவிலான பதற்றம் காணப்படுகிறது.
தவிர்க்கும் முதலீட்டாளர்கள்
இதனால் அதிகளவிலான முதலீடுகளை தவிர்த்து வருகின்றனர். சொல்லப்போனால் போட்ட முதலீடுகளையே கூட வெளியே எடுத்து வருகின்றனர். ஏற்கனவே ஆசிய நாணயங்களிலேயே ரூபாய் படு வீழ்ச்சி கண்டுள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது 74 ரூபாயை தொட்டுள்ளது.
விலை குறைவு
ஏன் ரூபாயை ஊக்கப்படுத்தும் விதமாகத்தான் கச்சா எண்ணெய் விலை தான் சர்வதேச சந்தையில் 30% வீழ்ச்சி கண்டுள்ளதே. அப்புறம் எப்படி ரூபாய் இவ்வளவு வீழ்ச்சி கண்டுள்ளது. சொல்லப்போனால் இது பணவீக்கத்தினை கட்டுபடுத்த உதவுமே என்று கேட்பது புரிகிறது. நமக்கு கச்சா எண்ணெய் விலை குறைந்தால் அது நல்ல விஷயம் தான்.
இது தான் முக்கிய வணிகமே
ஆனால் இதையே முக்கிய வணிகமாக கொண்டுள்ள நாடுகளின் வர்த்தகம் என்ன ஆவது. அவர்களின் பொருளாதாரம் என்ன தான் ஆவது. இது ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரத்திலும் வீழ்ச்சி காண வழிவகுக்குமே. என்ற பதற்றத்தின் மத்தியில் முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை தவிர்த்து வருகின்றனர். இதனால் இந்திய பங்கு சந்தைகளும் வீழ்ச்சி கண்டுள்ளன.
அனைத்து குறியீடுகளும் வீழ்ச்சி
ஒரு புறம் சவுதி அரேபியாவின் அதிரடி முடிவால் சர்வதேச சந்தைகளும் படு வீழ்ச்சி கண்டுள்ளன. இதன் தாக்கம் இந்திய சந்தையிலும் உள்ளது. சொல்லப்போனால் இந்திய சந்தையில் உள்ள அனைத்து குறியீடுகளும் வீழ்ச்சி கண்டுள்ளன. எண்ணெய் விலை வீழ்ச்சியால் விலையை குறைக்க நேரிடுமே. இதனால் லாபம் குறையுமே என்ற நிலையில், ஓஎன்ஜிசி, வேதாந்தா, உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளது. இதே எபிபிசிஎல், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உள்ளிட்ட பங்குகள் சற்று ஏற்றத்துடனும் உள்ளன.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!



Click it and Unblock the Notifications