நடப்பு வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் ஏற்ற இறக்கத்தில் காணப்படுகின்றன. இது வாரத்தின் இறுதி வர்த்தக நாள் என்பதால், சந்தையில் புராபிட் புக்கிங்காக இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
கடந்த அமர்வில் அமெரிக்க சந்தைகள் உச்சத்தில் முடிவடைந்திருந்தாலும், பெரும்பாலான டெக் நிறுவனங்களின் பங்குகள் நஷ்டத்தில் முடிவடைந்தன. பொருளாதாரம் மீண்டு வந்து கொண்டுள்ளது சந்தைக்கு சாதகமான விஷயமாக பார்க்கப்பட்டாலும், உருமாற்றம் அடைந்துள்ள டெல்டா கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவது கவலையளிக்கும் ஒரு விஷயமாகவே பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் ஆசிய சந்தைகள் பலவும் சந்தையில் இன்று தொடக்கத்திலேயே பலத்த சரிவினைக் கண்டன. இதன் எதிரொலியாக இந்திய சந்தையும் தொடக்கத்தில் பலமான சரிவினையே கண்டது.
இந்திய சந்தைகள் தொடக்கம்
இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் சற்று சரிவில் தான் காணப்பட்டது. இதையடுத்து தொடக்கத்திலும் பலமான சரிவில் தான் தொடங்கியது. குறிப்பாக சென்செக்ஸ் 581.19 புள்ளிகள் குறைந்து, 55,048.30 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 174.30 புள்ளிகள் குறைந்து, 16,394.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து 2 பங்குகள் ஏற்றத்திலும், 1 பங்குகள் சரிவிலும்,3224 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
இன்டெக்ஸ் நிலவரம்
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளளும் சிவப்பு நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக பிஎஸ்இ மெட்டல்ஸ் கிட்டதட்ட 4% சரிவிலும், நிஃப்டி பிஎஸ்இ, பேங்க் நிஃப்டி உள்ளிட்ட குறியீடுகள் 1% மேலாகவும், மற்ற குறியீடுகள் 1% கீழாகவும் சரிவில் காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீடு
குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள ஏசியன் பெயிண்ட்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், ஹெச்.டி.எஃப்.சி, பஜாஜ் பைனான்ஸ், பார்தி ஏர்டெல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே டாடா ஸ்டீல், ஹிண்டால்கோ, ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல், ஓ.என்.ஜி.சி, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஏசியன் பெயிண்ட்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், பார்தி ஏர்டெல், ஹெச்.டி.எஃப்.சி, பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே டாடா ஸ்டீல், கோடக் மகேந்திரா, டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டீஸ், லார்சன், ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
ரூபாய் மதிப்பு
இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சற்று குறைந்து, 74.91 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வில் முடிவு விலையானது 74.16 ரூபாயாக இருந்தது.
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 283.67 புள்ளிகள் குறைந்து, 55,345 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 113.60 புள்ளிகள் குறைந்து, 16,455.25 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.
More From GoodReturns

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

சென்செக்ஸ், நிஃப்டி அதிரடி ஏற்றம்! ஒரே நாளில் 17 லட்சம் கோடி லாபம்.. கொண்டாட்டத்தில் முதலீட்டாளர்கள்!

ஒரே நாளில் ரூ14 லட்சம் கோடிக்கு மேல் லாபம்! சென்செக்ஸ் 2600 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்!ஏன் தெரியுமா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

டிரம்ப் கொடுத்த ஸ்பீச்: ரத்தக்களரியான பங்குச் சந்தை? சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி?

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை! புனித வெள்ளி NSE, BSE ,MCX இயங்குமா? முழு விபரம்!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications