இன்போசிஸ் எதிர்பார்த்ததை விட குறைவான லாபம் மற்றும் வருவாய் அளவீட்டை தனது காலாண்டு முடிவுகளில் வெளியிட்டதை தொடர்ந்து, திங்கட்கிழமை காலை வர்த்தகத்தில் மந்தமான சர்வதேச வர்த்தக சூழ்நிலைகளுக்கு மத்தியில் சென்செக்ஸ் 900 புள்ளிகளை இழந்துள்ளது.
சர்வதேச சந்தையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் திங்கட்கிழமை ஆசிய சந்தை மந்தமான வர்த்தகத்தை பதிவு செய்திருக்கும் வேளையில் மும்பை பங்குச்சந்தை அதிகப்படியான பாதிப்பை எதிர்கொண்டு உள்ளது.

வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று சென்செக்ஸ் 957.85 புள்ளிகள் சரிந்துள்ளது. காலை வர்த்தகம் துவங்கியது முதல் சரிவுடன் துவங்கி 1.57 சதவீதம் சரிந்து 59,482.06 புள்ளிகளை அடைந்துள்ளது. இதேபோல் நிஃப்டி குறியீடு 187.70 புள்ளிகள் சரிந்து 17,641.00 ஆக சரிந்துள்ளது. இதன் மூலம் இன்று சென்செக்ஸ் 60000 புள்ளிகள், நிஃப்டி 17800 புள்ளிகள் என்ற பென்ச்மார்க் அளவீட்டை இழந்துள்ளது.
இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் பங்குகள் இன்று காலை வர்த்தகம் திறந்ததில் இருந்து அதிகப்படியாக நிலையில் 12 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. மும்பை பங்குச்சந்தையில் இன்போசிஸ் பங்குகள் 11.59 சதவீதம் வரையில் சரிந்து 1,228.70 ரூபாயாக குறைந்துள்ளது.
இன்போசிஸ் நிறுவனம் தனது மார்ச் காலாண்டு முடிவுகளை வியாழக்கிழமை வெளியிட்டது. நடப்பு நிதியாண்டின் கடைசி காலாண்டான மார்ச் காலாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த ஆண்டை காட்டிலும் 7.8 சதவீதம் உயர்ந்து ரூ.6,128 கோடியாக இருந்தது.
இந்த லாப அளவீடுகள் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளிக்காத நிலையில் இன்று காலை இன்போசிஸ் பங்குகள் 11.52 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. இதேபோல் ஐடி துறையில் டெக் மஹிந்திரா 6.78 சதவீதமும், HCL டெக் நிறுவன பங்குகள் 4.37 சதவீதமும், விப்ரோ 3.87 சதவீதமும், டிசிஎஸ் 3.57 சதவீதமும் சரிந்தன.
சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் இன்போசிஸ் 10.48 சதவீத சரிவுடன் பெரும் பாதிப்பை எதிர்கொண்டு உள்ளது. இதை தொடர்ந்து 5 சதவீத சரிவுடன் டெக் மஹிந்திரா, 3.25 சதவீத சரிவுடன் HCL டெக், 2.62 சதவீத சரிவுடன் விப்ரோ, 2.26 சதவீத சரிவுடன் டிசிஎஸ் என ஒட்டுமொத்த ஐடி பங்குகளும் சரிவை சந்தித்துள்ளது.
இதை தொடர்ந்து மாருதி சுசூகி, டாடா மோட்டார்ஸ் பஜாஜ் பின்சர்வ், ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, டாடா ஸ்டீல், சன் பார்மா, என்டிபிசி, பார்தி ஏர்டெ, ஹெச்டிஎப்சி, எல் அண்ட் டி, ஹெச்டிஎப்சி ஆகிய நிறுவனங்களும் சரிவுடன் உள்ளது.
அமெரிக்க சந்தை வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் மந்தமான ரீடைல் விற்பனை தரவுகள் எதிரொலியாக சரிவுடன் முடிவடைந்தது. இதன் வாயிலாக ஆசிய சந்தை மந்தமான வர்த்தகத்தை பதிவு செய்தாலும் சீன ப்ளூ சப் குறியீடு 0.7 சதவீத உயர்வை சந்தித்த காரணத்தால் ரீடைல் முதலீட்டைளர்கள் மத்தியில் பெரும் சரிவு இருக்காது என நம்பப்படுகிறது.
இந்திய ரூபாய் மதிப்பு 5 பைசா சரிந்து 81.90 ரூபாயாக உள்ளது, கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து 80 டாலருக்கும் அதிகமாக இருக்கும் காரணத்தால் டாலர் மதிப்பில் சில தடுமாற்றங்கள் உடன் இருந்தாலும், அமெரிக்க கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது அந்நாட்டு பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பை உருவாக்கியுள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications