சென்னை: அமெரிக்காவில் உற்பத்தித் துறை தரவுகள் வெளியான நிலையில் அந்நாட்டில் மீண்டும் ரெசிஷன் அச்சம் அதிகரித்து பங்குச்சந்தையைப் பதம் பார்த்துள்ளது. இப்படியிருக்கையில் இன்று காலை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு கிட்டத்தட்ட 600 புள்ளிகள் வரையில் சரிந்துள்ளது.
அமெரிக்க பங்குச்சந்தையில் ஏற்பட்டு உள்ள சரிவின் தாக்கம் இந்தியச் சந்தையை மட்டும் அல்லாமல் உலகளாவிய சந்தைகளையும் கடுமையாகப் பாதித்துள்ளது. இந்த நிலையில் இன்று மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 புதன்கிழமை காலை வர்த்தகம் துவங்கும் போதே பெரும் சரிவுடன் துவங்கியதால் முதலீட்டாளர்கள் பீதி அடைந்துள்ளனர்.

இன்று காலை வர்த்தக துவக்கத்தில் சென்செக்ஸ் 710 புள்ளிகள் வரையில் குறைந்து 81,845 புள்ளிகளை அடைந்தது, அதே நேரத்தில் நிஃப்டி 50 குறியீடு, 175 புள்ளிகள் குறைந்து 25,104 வரையில் குறைந்தது. சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் ஏசியன் பெயின்ட்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர் ஆகிய நிறுவனங்கள் மட்டுமே உயர்வுடன் உள்ளது.
வரலாற்று ரீதியாகப் பார்க்கும் போது, செப்டம்பர் மாதம் உலகளாவிய சந்தைகளுக்குப் பலவீனமான மாதமாக இருந்து வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் இது தொடர்ந்து நடக்கும் ஒரு விஷயமாகவே உள்ளது. இதேபோல் இந்த மாதத்தின் ஆரம்ப வர்த்தக போக்குகளைப் பார்க்கும் போது, இந்த ஆண்டும் இது உண்மையாக இருக்கலாம். நேற்று அமெரிக்கப் பங்குச்சந்தையில் உற்பத்தித் துறையின் வீழ்ச்சியின் காரணமாக அந்நாட்டின் பொருளாதாரம் மீண்டும் ரெசிஷனுக்குள் நுழையும் என எதிர் பார்க்கப்படுகிறது. இதனால் பங்குச்சந்தையில் பெரும் சரிவு பதிவாகியுள்ளது.
அமெரிக்க உற்பத்தித் துறை அந்நாட்டின் வர்த்தக சந்தைக்கு முக்கிய தூணாக இருக்கும் வேளையில், தற்போது பதிவாகியுள்ள மந்தமான சூழ்நிலையில் அமெரிக்கப் பங்குச்சந்தையை மட்டும் பாதிக்காமல் சர்வதேசச் சந்தையையும் பாதிக்கும்.
இந்த சூழ்நிலையில் முதலீட்டாளர்கள் Buy on Dips என்ற கொள்கையின் கீழ் முதலீடு செய்தால் கட்டாயம் சந்தை மீண்டு வரும் போது பெரும் லாபத்தைப் பார்க்க முடியும் என்பது சந்தை நிபுணர்களின் கருத்து. இதேபோல் அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகித குறைப்பு மற்றும் அமெரிக்க ரெசிஷன் அச்சத்திற்கு மத்தியில் ரீடைல் முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீட்டை பாதுகாப்பாக தரமான லார்ஜ்கேப் பங்குகளில் அதிகளவில் முதலீடு செய்வது உத்தமம்.
உலகளாவிய பங்குச்சந்தை பார்க்கும் போது, செயற்கை நுண்ணறிவு குறித்த உற்சாகம் முதலீட்டாளர்கள் மத்தியில் குறைந்துள்ளது. இதுவும் நேற்று வால்ஸ்ட்ரீட் சரிவுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. டாவ் ஜோன்ஸ் இண்டஸ்ட்ரீயல் 1.51 சதவீதம் குறைந்து 40,936.93 ஆக முடிந்தது; S&P 500 2.12 சதவீதம் சரிந்து 5,528.93 ஆக மூடப்பட்டது; நாஸ்டாக் காம்போசிட் 3.26 சதவீதம் சரிந்து 17,136.30 ஆக மூடப்பட்டது.
இது இன்று ஆசியச் சந்தையில் பங்குச்சந்தை சரிவுக்கு மிகவும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது, ஆசிய-பசிபிக் பங்குச்சந்தைகளும் இன்று பெரும் சரிவுக்குத் தள்ளப்பட்டு உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications