இந்தியப் பங்குச் சந்தைகள் திங்கட்கிழமை வர்த்தகத்தில் எதிர்பார்க்கப்பட்ட படியே கடும் சரிவுடன் துவங்கியுள்ளது, ஏற்கனவே பொதுத் தேர்தல் காரணமாக மந்தமான வர்த்தகத்தைப் பதிவு செய்து வரும் இந்தியப் பங்குச்சந்தையை இஸ்ரேல் மீதான ஈரான் ராணுவத்தின் 200 ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் மோசமான நிலைக்குத் தள்ளியுள்ளது.
இஸ்ரேல் மீதான ஈரான் ராணுவத்தின் தாக்குதல் எதிரொலியாக இன்று காலை ஆசிய சந்தையில் பெரும்பாலானவை சரிவை சந்தித்த நிலையில், இந்திய சந்தையும் சரிந்துள்ளது.

மும்பை பங்குச்சந்தையின் (பிஎஸ்இ) சென்செக்ஸ் 800 புள்ளிகள் (0.86%) சரிந்து 73,468.70 என்ற புள்ளியில் வர்த்தகமானது. இதேபோல் தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி 50 குறியீடு 190 புள்ளிகள் (0.84%) சரிந்து 22,330 என்ற புள்ளியில் வர்த்தகமாகிக் கொண்டிருந்தது.
இந்த அதிரடி சரிவால் பங்குச் சந்தை மூலதன மதிப்பீட்டிலும் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. மும்பை பங்குச்சந்தை பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு ரூ.8 லட்சம் கோடி குறைந்து ரூ.391.46 லட்சம் கோடியாக உள்ளது.
வர்த்தக துறை அடிப்படையில் பார்க்கும்போது, நிஃப்டி பொதுத்துறை வங்கி, ரியல் எஸ்டேட் மற்றும் மீடியா ஆகிய துறைகள் 2 சதவீதத்திற்கும் அதிகமான சரிவைக் கண்டன. இதேபோல் நிஃப்டி ஆட்டோ, நிதி, உலோகம், மருந்து மற்றும் எரிபொருள் துறைகள் 1% முதல் 2% வரை இழப்பைச் சந்தித்தன.
ஏற்கனவே இஸ்ரேல் - பாலஸ்தீன மத்தியிலான பிரச்சனை சர்வதேச வர்த்தகத்தைப் பாதித்திருக்கும் வேளையில், தற்போது ஈரான் - இஸ்ரேல் மத்தியிலான பிரச்சனை மேற்கு ஆசியாவில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இதனால், கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் உள்ளது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு பெட்ரோல், டீசல் விலையை மட்டும் உயர்த்தாமல் பணவீக்கத்தை அதிகரிக்கச் செய்யும், இது பங்குச் சந்தைகளுக்கு நெருக்கடியை அதிகரிக்கும், வட்டி விகிதம் குறைவதைத் தடுக்கும்.
ஈரான் - இஸ்ரேல் மத்தியில் வெடித்துள்ள போர் கட்டாயம் முதலீட்டுச் சந்தையைப் பாதிக்கும், குறிப்பாகப் பணவீக்கம் அதிகரிக்கும் அச்சம் இருக்கும் காரணத்தால் ஜிடிபி வளர்ச்சியில் பாதிப்பும், வளர்ச்சி திட்டத்திற்கான முதலீட்டில் மந்த நிலையும் ஏற்படும். இது நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு சந்தையைப் பாதிக்கும்.
ஏற்கனவே அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு மோசமான நிலையில் இருக்கும் போது, இன்று டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 5 பைசா சரிந்து 83.36 ரூபாயாக உள்ளது. இதேபோல் உலகின் 6 முக்கிய நாணயங்களுக்கு எதிரான டாலர் மதிப்பு 105.94 என்ற மிக வலிமையான நிலையில் உள்ளது.
More From GoodReturns

நாளை பங்குச் சந்தை ஏற்றம் காணுமா? சரியுமா? சந்தையை தீர்மானிக்கப் போகும் 3 முக்கிய காரணிகள்?

Sensex: ஒன்னில்ல இரண்டில்ல.. 9 லட்சம் கோடி இழப்பு.. தேம்பி தேம்பி அழும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்..!!

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!



Click it and Unblock the Notifications