திங்கட்கிழமை வர்த்தகம் பெரும் தடுமாற்றத்திற்கு மத்தியில் 360 புள்ளிகள் சரிவுடன் இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று 57,773.55 புள்ளிகள் உடன் துவங்கி 57,084.91 புள்ளிகளை வரையில் சரிந்தது. வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவான 57,989.90 புள்ளிகள் உடன் கணக்கிட்டால் இன்று ஒரு நாள் வர்த்தகத்தில் மட்டும் சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிந்துள்ளது.
இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 360.95 புள்ளிகள் சரிந்து 57,628.95 புள்ளிகளை அடைந்துள்ளது. இதேபோல் நிஃப்டி குறியீடு 111.65 புள்ளிகள் சரிந்து 16,988.40 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
இன்றைய வர்த்தக சந்தை சரிவுக்கு 5 முக்கிய காரணம் என்ன..?
அமெரிக்க வங்கி துறை
அமெரிக்காவில் silvergate bank வீழ்ச்சியில் துவங்கி சிலிக்கான் வேலி வங்கி, சிக்னேச்சர் வங்கி, First Republic Bank ஆகியவை அமெரிக்காவில் திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதில் First Republic Bank-ஐ சுமார் 11 வங்கிகள் இணைந்து 30 பில்லியன் டாலர் அளவிலான தொகை uninsured deposit ஆக முதலீடு செய்து காப்பாற்றியது.
அமெரிக்க டாலர் இன்டெக்ஸ்
இதற்கிடையில் அமெரிக்க டாலர் இன்டெக்ஸ் கடந்த சில வாரங்களாக அதிகளவிலான தடுமாற்றத்தையும் சந்தித்து வருகிறது. இந்த தடுமாற்றத்திற்கு முக்கியமான காரணம் அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் பணவீக்கத்தை குறைக்க வட்டி விகிதத்தை உயர்த்துவதாக அறிவித்திருந்தது, ஆனால் சிலிக்கான் வேலி வங்கி திவால்-க்கு பின்பு வட்டி விகித உயர்வு திட்டத்தின் இருந்த மாற்றியுள்ளது.
ஐரோப்பிய வங்கித் துறை
அதுவே ஐரோப்பாவில் கிரெடிட் சூயிஸ் பணபுழக்கப் பிரச்சனையில் மாடிக்கொண்ட போது சுவிஸ் நாட்டின் மத்திய வங்கி 50 பில்லியன் பிராங்க் கொடுத்து காப்பாற்றிய பின்னும், கிரெடிட் சூயிஸ் நிலைமை சரியாகவில்லை. ஆனாலும் முதலீட்டு சந்தையில் வங்கிகளின் வீழ்ச்சி எதிரொலியில் இருந்து மீள முடியவில்லை.
கிரெடிட் சூயிஸ் - UBS
இதன் வாயிலாக சனி மற்றும் ஞாயிற்றுகிழமை சுவிஸ் மத்திய வங்கி மற்றும் வங்கி கட்டுப்பட்டு அமைப்பு இணைந்து சுவிஸ் நாட்டின் 2வது பெரிய வங்கியாக கிரெடிட் சூயிஸ் வங்கியை மாபெரும் வங்கியான UBS 3 பில்லியன் பிராங்க் தொகைக்கு முழுமையாக வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.
ஐரோப்பிய சந்தை துவக்கம்
இதன் மூலம் காலை வர்த்தகத்தில் 900 புள்ளிகள் வரையில் சரிந்த சென்செக்ஸ் ஐரோப்பிய சந்தை துவக்கத்தில் பெரும் சரிவில் இருந்து மீண்டு சென்செக்ஸ் குறியீடு 360.95 புள்ளிகள் மட்டுமே சரிந்து 57,628.95 புள்ளிகளுக்கு மீண்டு உள்ளது, இல்லையெனில் 57,084.91 புள்ளிகளுக்கு கீழ் சென்றிருக்கும்.
ஆசிய சந்தை
அமெரிக்க மற்றும் ஐரோப்பிய வங்கிகள் வீழ்ச்சி காரணமாக திங்கட்கிழமை வர்த்தகம் துவங்கும் போது ஆசிய சந்தையில் ஜப்பான், ஹாங்காங், கொரியா, சீன சந்தைகள் 3 சதவீதம் வரையில் சரிந்தது.
அமெரிக்க மத்திய வங்கி
மார்ச் 22 ஆம் தேதி அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வங்கி 2 நாள் நாணய கொள்கை கூட்டத்தை நடத்த உள்ளது. இக்கூட்டத்தின் முடிவில் வட்டி விகித உயர்வு குறித்து அறிவிப்பு வெளியாகும், இக்கூட்டத்தில் வங்கி திவால் நிலைக்கு மத்தியில் கூடுதல் சுமையை வங்கி துறைக்கு அளிக்க கூடாது என்பதற்காக வட்டி விகித உயர்வை நிறுத்த உள்ளதாக கூறப்பட்டாலும், சில கணிப்புகள் 0.25 சதவீதம் மட்டும் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதானி குரூப் பங்குகள்
அதானி எண்டர்பிரைசர்ஸ், அதானி போர்ட்ஸ், அதானி பவர், அதானி டிரான்ஸ்மிஷன், அதான் டோட்டல் கேஸ், அதானி வில்மார் ஆகியவை இன்று 5.6 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.
More From GoodReturns

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?



Click it and Unblock the Notifications