1,100 புள்ளிகளுக்கு மேல் சரிவில் சென்செக்ஸ்.. நிஃப்டி 17,500-க்கு கீழ் சரிவு..!

நடப்பு வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள், இன்று காலை தொடக்கத்திலேயே சரிவில் தொடங்கின. இந்த நிலையில் தற்போது சென்செக்ஸ் 1,100 புள்ளிகளுக்கும் மேலாக சரிவில் காணப்படுகின்றது.

இன்று காலை 9.26 நிலவரப்படி சென்செக்ஸ் 1,120 புள்ளிகள் அல்லது 1.88% சரிவினைக் கண்டு, 58,516 புள்ளிகளாக வர்த்தகமாகியது. இதே நிஃப்டி 326 புள்ளிகள் அல்லது 1.83% சரிவினைக் கண்டு, 17,439 புள்ளிகளாக வர்த்தகமாகியுள்ளது.

இதில் ரிலையன்ஸ் இண்டஸ்ட் ரீஸ் நிறுவனம், மாருதி, பஜாஜ் பைனான்ஸ், கோடக் மகேந்திரா வங்கி, ஹெச்.சிஎல் டெக், பஜாஜ் பின்செர்வ், எஸ்பிஐ உள்ளிட்ட பங்குகள் பலத்த சரிவில் காணப்படுகின்றன.

இன்டெக்ஸ் நிலவரம்

இன்டெக்ஸ் நிலவரம்

குறிப்பாக இன்றைய சரிவுக்கும் மத்தியில் நிஃப்டி ஆட்டோ மற்றும் நிஃப்டி பொதுத்துறை வங்கிகள் கிட்டதட்ட 3% மேலாக வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளன. இதுவே பிஎஸ்இ ஆயில் & கேஸ், பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள், பிஎஸ்இ ஸ்மால் கேப், பிஎஸ்இ மிட் கேப், பேங்க் நிஃப்டி உள்ளிட்ட குறியீடுகள் 2% மேலாகவும் சரிவில் காணப்படுகின்றன. மற்ற குறியீடுகள் 1% மேலாக சரிவில் காணப்படுகின்றன.

பணவீக்கம் பற்றிய அச்சம்

பணவீக்கம் பற்றிய அச்சம்

உலகெங்கிலும் பல்வேறு நாடுகளில் அதிகரித்துள்ள பணவீக்கம் குறித்தான அச்சத்தின் மத்தியில், அன்னிய முதலீடுகள் விகிதமானது குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது முந்தைய மாதங்களுடன் ஒப்பிடும்போது நடப்பு மாதத்தில் ஏற்கனவே குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சொல்லப்போனால் இருக்கும் முதலீடுகள் அதிகளவில் வெளியேறி வருகின்றன.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை

கடந்த வாரத்தில் மட்டும் டாப் 10 நிறுவனங்களில் டாப் லூசராக ரிலையன்ஸ் இருந்தது. குறிப்பாக இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் மட்டும், 75,691.53 கோடி ரூபாய் குறைந்து, 15,68.550.17 கோடி ரூபாயாக குறைந்தது. இந்த நிலையில் நடப்பு வாரத்திலும் அந்த சரிவு தொடர்ந்து கொண்டுள்ளது. இது ரிலையன்ஸ் குழுமத்தில் இருந்து O2C நிறுவனத்தைத் தனியாகப் பிரிக்கும் திட்டத்தைக் கைவிட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

தற்போதைய நிலவரம்

தற்போதைய நிலவரம்

இதற்கிடையில் 1.15 மணி நிலவரப்படி, தற்போது சென்செக்ஸ் 960.59 புள்ளிகள் குறைந்து, 58,675.42 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 282.05 புள்ளிகள் குறைந்து, 17,482.75 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.
ரிலையன்ஸ், பார்தி ஏர்டெல் பங்குகள் இன்று கவனிக்க வேண்டிய பங்குகளாக உள்ளன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+