வாரத்தின் இறுதி நாளான இன்று, காலையில் இந்திய பங்கு சந்தைகள் சற்று ஏற்றத்தில் தொடங்கியது. எனினும் முடிவில் மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 135 புள்ளிகள் குறைந்து 39,614 ஆகவும், இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 28 புள்ளிகள் குறைந்து, 11,733 ஆகவும் வர்த்தகமாகி வருகின்றது.
இதற்கிடையில் 1,322 பங்குகள் ஏற்றத்திலும், 1,222 பங்குகள் சரிவிலும், 167 பங்குகள் மாற்றமில்லாமலும் முடிவடைந்துள்ளது.

ஆட்டோ. வங்கி, எஃப்எம்சிஜி தவிர, மற்ற குறியீடுகள் ஏற்றத்தில் உள்ளன. இதே பிஎஸ்இ மிட்கேப் இண்டெக்ஸ் 0.6% அதிகரித்தும், பிஎஸ்இ ஸ்மால்கேப் பங்குகள் அதிக மாற்றம் இல்லாமலும் காணப்படுகிறது.
நிஃப்டி குறியீட்டில் உள்ள அதானி போர்ட்ஸ், பிபிசிஎல், கோல் இந்தியா, டாடா ஸ்டீல், சன் பார்மா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், பார்தி ஏர்டெல், ஹீரோ மோட்டோகார்ப், ஈச்சர் மோட்டார்ஸ், மாருதி சுசூகி, ஹெச்யுஎல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் காணப்படுகின்றது.
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டாடா ஸ்டீல், என்டிபிசி, சன் பார்மா, நெஸ்டில், ரிலையன்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், பார்தி ஏர்டெல், மாருதி சுசூகி, ஹெச்யுஎல், பஜாஜ் பைனான்ஸ், ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் காணப்படுகின்றது.
இன்று காலையில் சற்று சரிவில் தொடங்கி, பின் ஏற்றம் கண்டு, முடிவில் மீண்டும் சரிவிலேயே முடிவடைந்துள்ளது.ஆசிய பங்கு சந்தைகள் கடந்த மூன்று தினங்களாகவே சரிவினைக் கண்டு வரும் நிலையில், இந்திய பங்கு சந்தைகள் சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது.
.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் இது இரண்டாம் கட்ட பரவலாக இருக்குமோ என்ற பய உணர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் மீண்டும் லாக்டவுன் அமல்படுத்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுவே இந்தியாவிலும் சில மாநிலங்களில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது. இது பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் இன்று ஆசிய சந்தைகளும் சற்று சரிவிலேயே காணப்படுகின்றது. குறிபாக ஷாங்காய் ,மற்றும் டோக்கியோ சந்தைகள் 1.5 சதவீதம் சரிவிலேயே காணப்படுகின்றது. இதே கோப்சி 2.56% சரிவிலும், ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் சந்தைகள் 1.5% சரிவிலும் காணப்படுகின்றது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications