சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ள காரணத்தால் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் தற்போது அதிகளவில் கச்சா எண்ணெய் மீது முதலீடு செய்து வருகின்றனர்.
இசன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக மும்பை பங்குச்சந்தையின் வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்து வருகிறது.
மும்பை பங்குச்சந்தை
புதன்கிழமை காலை வர்த்தகம் துவக்கத்தில் பார்மா, ஐடி, நுகர்வோர் நிறுவனம், எப்எம்ஜிசி துறை நிறுவனங்கள் கணிசமான வர்த்தக உயர்வை சந்தித்த மும்பை பங்குச்சந்தை, ஐரோப்பிய சந்தை துவக்கத்தில் அதிகளவில் முதலீடு வெளியேறியது.
சென்செக்ஸ்
மும்பை பங்குச்சந்தையில் அதிகளவிலான முதலீடு வெளியேறிய காரணத்தால் சென்செக்ஸ் குறியீடு 151.95 புள்ளிகள் சரிந்து 33,218.81 புள்ளிகளை அடைந்தது.
நிஃப்டி
சென்செக்ஸ் குறியீட்டை போல காலை வர்த்தகத்தில் கணிசமான வர்த்தக உயர்வை சந்தித்த நிஃப்டி குறியீடு வர்த்தக முடிவில் 47 புள்ளிகள் சரிந்து 10,303.15 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
முக்கிய நிறுவனங்கள்
புதன்கிழமை வர்த்தக முடிவில் ஆக்சிஸ் வங்கி, ஏசியன் பெயின்ட்ஸ், சிப்லா, சன்பார்மா, கோல் இந்தியா ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான வளர்ச்சியை சந்தித்தது.


Click it and Unblock the Notifications