சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி.. ரூபாயின் மதிப்பும் ரூ.74.10 சரிவு.. என்ன காரணம்..!

வாரத்தின் நான்காவது நாளான இன்றும் இந்திய பங்கு சந்தைகள் சரிவிலேயே தொடங்கி சரிவிலேயே முடிவடைந்துள்ளன. குறிப்பாக மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 172 புள்ளிகள் குறைந்து, 39,749 ஆகவும், இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 58 புள்ளிகள் குறைந்து, 11,670 ஆகவும் வர்த்தகமாகி முடிவடைந்துள்ளது.

இந்த நிலையில் 1,019 பங்குகள் ஏற்றத்திலும், 1,452 பங்குகள் சரிவிலும், 170 பங்குகள் மாற்றமில்லாமலும் முடிவடைந்துள்ளது. இரண்டாவது நாளாக இன்றும் எஃப் & ஓ எக்பெய்ரி என்பதால் சந்தை சரிவிலேயே முடிவடைந்துள்ளது..

இதே அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 74.10 ரூபாயாக சரிவடைந்து காணப்படுகிறது.

சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி.. ரூபாயின் மதிப்பும் ரூ.74.10 சரிவு.. என்ன காரணம்..!

இதற்கிடையில் நிஃப்டி, சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் சரிவிலேயே காணப்படுகிறது. நிஃப்டி குறியீட்டில் உள்ள ஏசியன் பெயிண்ட்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், ஸ்ரீ சிமெண்ட்ஸ், கோடக் மகேந்திரா, ஹெச்சிஎல் டெக் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், லார்சன், டைட்டன் நிறுவனம், ஓஎன்ஜிசி, டாடா மோட்டார்ஸ், அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் காணப்படுகின்றது.

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஏசியன் பெயிண்டஸ், ஹெச்சிஎல் டெக், டைட்டன் நிறுவனம், அல்ட்ராடெக் சிமெண்ட், ஐசிஐசிஐ வங்கி, கோடக் மகேந்திரா வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும் லார்சன், டைட்டன் நிறுவனம், ஓஎன்ஜிசி, டாடா மோட்டார்ஸ், அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் காணப்படுகின்றது.

இன்று எஃப்&ஓ எக்ஸ்பெய்ரி என்பதால் முதலீட்டாளர்கள் புராபிட் செய்தும், ரோல் ஓவர் செய்ததாலும் சந்தை வீழ்ச்சி காண இதுவும் ஒரு காரணமாக அமைந்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் இது இரண்டாம் கட்ட பரவலாக இருக்குமோ என்ற பய உணர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் மீண்டும் லாக்டவுன் அமல்படுத்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக பொருளாதாரம் என்னவாகுமோ என்ற பய உணர்வு முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதனால் சர்வதேச பங்கு சந்தைகள் சிலவும் சரிவில் காணப்படுகின்றது. இதன் எதிரொலியாக இந்திய சந்தையும் சரிவிலேயே காணப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+