சீன அரசு, அமெரிக்காவின் 50 பில்லியன் டாலர் வர்த்தக மதிப்புடைய பொருட்கள் மீது வரியை உயர்த்த திட்டமிட்ட நிலையில், தற்போது அமெரிக்க அரசு, 200 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் மீது 10 சதவீத வரியை விதிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இதன் மூலம் இரு நாடுகள் மத்தியில் தணிந்திருந்த வர்த்தகப் போர் பதற்றம் மீண்டும் ஆசிய சந்தையில் அதிகரித்துள்ளது.

அமெரிக்கா - சீனா இடையில் உருவாகியுள்ள இந்த வர்த்தகப் போர் பதற்றத்தின் வாயிலாக ஆசிய சந்தை இன்று அதிகளவிலான சரிவை சந்தித்தது. ஆஸ்திரேலியா 0.06% சரிவும், சீனா 3.78% சரிவும், ஹாங்காங் 2.76% சரிவும், ஜப்பான் 1.77% சரிவும், தைவான் 1.65 சதவீத சரிவும் சந்தித்துள்ளது.
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 261.52 புள்ளிகள் சரிந்து 35,286.74 புள்ளிகளை அடைந்தது, அதேபோல் நிஃப்டி குறியீடு 89.40 புள்ளிகள் உயர்ந்து 10,710.45 புள்ளிகள் எட்டி இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் ஐடிசி, ஒஎன்ஜிசி, ஹெச்டிஎப்சி வங்கி, ஹெச்டிஎப்சி ஆகியவை மட்டுமே உயர்வை அடைந்துள்ளது.
வேதாந்தா, அதானி போர்ட்ஸ், மஹிந்திரா, ரிலையன்ஸ், இண்டஸ்இந்த் வங்கி ஆகியவை அதிகளவிலான சரிவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications