நடப்பு வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்று, பல்வேறு சர்வதேச காரணிகளுக்கு மத்தியில், இந்திய சந்தைகள் இன்று பலத்த சரிவில் காணப்படுகின்றன.இன்று காலை தொடக்கத்தில் பலத்த சரிவில் தொடங்கியதையடுத்து, தற்போது சென்செக்ஸ் 501.74 புள்ளிகள் குறைந்து, 59,165.86 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 135.05 புள்ளிகள் குறைந்து 17,613 புள்ளிகளாகவும் காணப்படுகின்றது.
இன்று தொடக்கத்தில் சற்று சரிவில் தொடங்கியிருந்தாலும், இன்று சந்தையானது மீண்டும் ஏற்ற பாதைக்கு திரும்புமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து புதிய உச்சத்தினை தொட்ட நிலையில், இன்று மீண்டும் சரிவினைக் கண்டுள்ளதே, இது இன்னும் சரியுமா? அடுத்து என்ன செய்யலாம்.
இந்திய சந்தையில் அன்னிய முதலீடுகள் வரத்து என்பது வலுவாக இருந்தாலும், தொடர்ந்து உள்நாட்டு முதலீட்டாளர்கள் வெளியேறி வருகின்றனர். ஏன்? என்ன காரணம், வாருங்கள் பார்க்கலாம்.
சர்வதேச சந்தைகள் வீழ்ச்சி
அமெரிக்க பங்குச் சந்தையானது கடந்த செவ்வாய்க்கிழமையன்று முடிவில், பலத்த சரிவை கண்டு சரிவில் முடிவடைந்ததை அடுத்து, ஆசிய சந்தைகளும் இன்று தொடக்கத்திலேயே பலத்த சரவில் காணப்பட்டது. இது அமெரிக்காவின் நுகர்வோர் நம்பிக்கை குறித்தான குறியீடானது, ஏழு மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. இது பொருளாதாரம் எதிர்பார்ப்பினை விட மிக மெதுவான வளர்ச்சி கண்டு வருவதையே சுட்டிக் காட்டுகின்றது.
நுகர்வோர் நம்பிக்கை வீழ்ச்சி
நுகர்வோர் நம்பிக்கை குறித்தான இந்த குறியீடானது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 115.4 ஆக இருந்த விகிதம், தற்போது 109.3 ஆக குறைந்துள்ளது. ஆக இது டாலரின் மதிப்பில் அழுத்தத்தை ஏற்படுத்தியதை அடுத்து, அமெரிக்க பங்குச் சந்தைகள் சரிவுடன் முடிவடைந்தது. இதனையடுத்து ஆசிய சந்தைகள் பலவும் சரிவில் காணப்பட்டது. இந்த நிலையில் இந்திய பங்குச் சந்தையும் தற்போது பலத்த சரிவில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
பணவீக்கம் குறித்த கவலை
அமெரிக்க பங்குச் சந்தைகள் சரிவில் முடிவடைந்து இருந்தாலும், அமெரிக்காவின் பத்திர சந்தையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் நிலையில், இது டாலரின் மதிப்பு அதிகரிக்க காரணமாக அமையலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இதனால் தற்போது பணவீக்கம் குறித்தான அச்சமும் நிலவி வருகின்றது. இதற்கிடையில் அமெரிக்க டாலரின் மதிப்பானது 93.7 என்ற அளவில் காணப்படுகிறது. இதுவும் சந்தை சரிவுக்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது.
சீனாவின் மின்வெட்டு பிரச்சனை
இதே ஆசிய சந்தைகளை பொருத்தவரையில் சர்வதேச காரணிகள் முக்கிய காரணமாக இருந்தாலும், சீனாவில் நிலக்கரி பற்றாக்குறையால், கடும் மின் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால் தொழிற்சாலைகளுக்கு தேவையான மின்சாரம் கிடைப்பதில் பிரச்சனை ஏற்படுகிறது. அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் அங்கு எலெக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி மற்றும் முக்கிய பொருட்களின் உற்பத்தியானது மோசமாக சரிவடையலாம் என்ற நிலையே நிலவி வருகிறது. இதற்கிடையில் இதன் தாக்கம் சர்வதேச அளவிலும் சப்ளை சங்கிலியில் எதிரொலிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இதுவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இன்று சந்தைகள் தொடக்கம்
இதற்கிடையில் இன்று ஃப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சென்செக்ஸ் 341.92 புள்ளிகள் சரிந்து 59,325.68 புள்ளிகளாக காணப்பட்டது. இதே தேசிய பங்கு சந்தை நிப்டி குறியீடு 137.10 புள்ளிகள் குறைந்து, 17,611.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
இதனையடுத்து சந்தையின் தொடக்கத்திலும் சரிவிலேயே காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 449.72 புள்ளிகள் குறைந்து, 59,217.88 புள்ளிகளாகவும், இதே நிப்டி 121.80 புள்ளிகள் குறைந்து, 17,626.80 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதையடுத்து 647 பங்குகள் ஏற்றத்திலும், 1069 பங்குகள் சரிவிலும், 93 பங்குகள் மாற்றம் இல்லாமலும் காணப்பட்டது.
இன்டெக்ஸ் நிலவரம்
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகள் சரிவில் காணப்படுகின்றன. குறிப்பாக பேங்க் நிப்டி, நிஃப்டி ஆட்டோ குறியீடுகள் 1% மேலாக சரிவினைக் கண்டுள்ளன. இதே நிப்டி ஐடி, பிஎஸ்இ எஃப்.எம்.சி.ஜி, பிஎஸ்இ கன்சியூமர் குட்ஸ், பிஎஸ்இ ஆயில் & கேஸ், பிஎஸ்இ டெக் குறியீடுகள் 1% கீழாக சரிவில் காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீட்டில் உள்ள கோல் இந்தியா, டிவிஸ் லேப், டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், ஐஓசி, என்.டி.பிசி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஐசிஐசிஐ வங்கி, ஹீரோ மோட்டோகார்ப், அல்ட்ராடெக் சிமெண்ட், பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்ரீஸ், பவர் கிரிட் கார்ப், என்.டி.பி.சி, பஜாஜ் பைனான்ஸ், சன் பார்மா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஐசிஐசிஐ வங்கி, அல்ட்ராடெக் சிமெண்ட், ஹெச்.டி.எஃப்.சி வங்கி, டெக் மகேந்திரா, பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சந்தையில் தற்போதைய நிலவரம்
இதற்கிடையில் இன்று காலை தொடக்கத்தில் பலத்த சரிவில் தொடங்கியதையடுத்து, தற்போது சென்செக்ஸ் 501.74 புள்ளிகள் குறைந்து, 59,165.86 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 135.05 புள்ளிகள் குறைந்து 17,613 புள்ளிகளாகவும் காணப்படுகின்றது. இது பல்வேறு எதிரான சர்வதேச காரணிகளுக்கு மத்தியிலும், புராபிட் புக்கிங் காரணத்தினாலும் சரியலாம் என்ற நிலையே நிலவி வருகின்றது.
More From GoodReturns

சென்செக்ஸ், நிஃப்டி அதிரடி ஏற்றம்! ஒரே நாளில் 17 லட்சம் கோடி லாபம்.. கொண்டாட்டத்தில் முதலீட்டாளர்கள்!

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

ஒரே நாளில் ரூ14 லட்சம் கோடிக்கு மேல் லாபம்! சென்செக்ஸ் 2600 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்!ஏன் தெரியுமா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

டிரம்ப் கொடுத்த ஸ்பீச்: ரத்தக்களரியான பங்குச் சந்தை? சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி?

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை! புனித வெள்ளி NSE, BSE ,MCX இயங்குமா? முழு விபரம்!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications