சென்செக்ஸ் 670 புள்ளிகள் சரிவு.. 2 முக்கியக் காரணம்..!!

குடியரசு தின விடுமுறையைத் தொடர்ந்து இன்றைய வர்த்தகத் துவக்கத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு பெரும் சரிவுடன் துவங்கியது.

பட்ஜெட்-க்கு முன்பு பங்குச்சந்தை வர்த்தகத்தில் சரிவு என்பது பெரிய விஷயம் இல்லையென்றாலும் இரு முக்கியக் காரணத்திற்காக இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு பெரும் சரிவைச் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் டிசம்பர் காலாண்டு வளர்ச்சி விகிதம் மற்றும் அதானி குழுமத்தின் அனைத்து நிறுவனங்களும் இன்று அதிகப்படியான சரிவை சந்தித்துள்ளது பெரும் பாதிப்பை மும்பை பங்குச்சந்தையில் ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளிக்கிழமை

வெள்ளிக்கிழமை

வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் சர்வதேச சந்தைகள் லாபகரமாகத் துவங்கினாலும் குடியரசு தினத்திற்கு ஒரு நாள் விடுமுறைக்குப் பின் வர்த்தகத்தைத் துவங்கிய மும்பை பங்குச்சந்தை புதன்கிழமை சந்தை தாக்கத்துடன் துவங்கியது மட்டும் அல்லாமல் கூடுதலான பாதிப்புகள் உடன் துவங்கியது குறிப்பிடத்தக்கது.

பங்குச் சந்தை

பங்குச் சந்தை

இந்திய பங்குச் சந்தை முக்கிய அளவுகோல்களான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் பெரும் சரிவுடன் துவங்கி முதலீட்டாளர்களின் முதலீட்டு மதிப்பை பெரிய அளவில் பதம் பார்த்து உள்ளது.

அமெரிக்கப் பொருளாதாரத் தரவுகள்

அமெரிக்கப் பொருளாதாரத் தரவுகள்

இன்றைய சரிவுக்கு மிக முக்கியமான காரணம் அமெரிக்கப் பொருளாதாரத் தரவுகள் என்றால் மிகையில்லை,, 2023 ஆம் ஆண்டில் அமெரிக்கா ரெசிஷனுக்குள் செல்லும் என்பது உறுதியாகியிருக்கும் வேளையில் எப்போது செல்லும் என்பது தான் அனைவரின் கேள்வியாக உள்ளது.

டிசம்பர் காலாண்டு

டிசம்பர் காலாண்டு

இந்த நிலையில் வியாழக்கிழமை மாலை அமெரிக்காவில் வெளியான அந்நாட்டின் டிசம்பர் காலாண்டு பொருளாதார வளர்ச்சி குறித்த தரவுகள் இந்திய சந்தையைப் பெரிய அளவில் பாதித்துள்ளது என்றால் மிகையில்லை.

வளர்ச்சி

வளர்ச்சி

அமெரிக்கப் பொருளாதாரம் செப்டம்பர் காலாண்டில் 3.2 சதவீதம் வளர்ச்சி அடைந்த நிலையில், டிசம்பர் காலாண்டில் அதிகப்படியான வட்டி விகிதம் மற்றும் ரெசிஷன் அச்சம் ஆகியவற்றுக்கு மத்தியில் 2.9 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது.

பண்டிகை காலம்

பண்டிகை காலம்

அமெரிக்காவில் டிசம்பர் காலாண்டு பொதுவாகவே பண்டிகை காலம் என்பதால் ரீடைல் விற்பனை எப்போதும் சிறப்பாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு டிசம்பர் மாத ரீடைல் விற்பனை மந்தமான வளர்ச்சியைப் பதிவு செய்தது மூலம் அமெரிக்காவின் பொருளாதாரப் பாதிப்பை தெரிந்துகொள்ள முடியும்.

அதானி குழுமம்

அதானி குழுமம்

இதேவேளையில் இந்தியாவில் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியமாக இருக்கும் அதானி குழுமம் குறித்து hindenburg research அமைப்பின் அறிக்கை பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் அதானி குழும பங்குகள் அனைத்தும் பெரும் சரிவை பதிவு செய்துள்ளது.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

இதன் எதிரொலியாக வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று சென்செக்ஸ் குறியீடு 644.34 புள்ளிகள் சரிந்து 59,560.72 புள்ளிகளை எட்டியுள்ளது. இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு அதிகப்படியாக 59,390 புள்ளிகள் வரையில் சரிந்தது.

டாப் 30 நிறுவனங்கள்

டாப் 30 நிறுவனங்கள்

சென்செக்ஸ் குறியீட்டிடன் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎப்சி, எஸ்பிஐ, ஆக்சிஸ் வங்கி பங்குகள் 2% மேல் சரிவடைந்த நிலையில் டாடா மோட்டார்ஸ் 7 சதவீதம் உயர்ந்து சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு இன்று 137.85 புள்ளிகள் சரிந்து 17,754.10 புள்ளிகளை எட்டியுள்ளது. இன்றைய வர்த்தகத்தில் அதிகப்படியாக நிஃப்டி குறியீடு 17,715.55 புள்ளிகளை எட்டியுள்ளது. இன்று நிஃப்டி ஆட்டோமொபைல், FMCG, ஐடி, பார்மா, ஹெல்த்கேர் இன்டெக்ஸ் மட்டுமே உயர்வுடன் உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+