இந்திய பங்கு சந்தைகள் மூன்றாவது அமர்வாக தொடர்ந்து சரிவில் முடிவடைந்துள்ளது. குறிப்பாக நிஃப்டி 17,000 புள்ளிகளுக்கு கீழாக முடிவடைந்துள்ளது.
சென்செக்ஸ் 843.79 புள்ளிகள் அல்லது 1.46% குறைந்து, 57,147.32 புள்ளிகளாகவும், நிஃப்டி 257.50 புள்ளிகள் அல்லது 1.49% குறைந்து, 16,983.50 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது.
இன்று ஆட்டோ, மெட்டல், ஐடி துறை, ஆயில் & கேஸ் உள்ளிட்ட அனைத்து குறியீடுகளும் சிவப்பு நிறத்திலேயே காணப்படுகிறது. இதில் மெட்டல்ஸ், ஐடி மற்றும் நுகர்வோர் பொருட்கள் குறித்த குறியீடு உள்ளிட்டவை பலத்த சரிவில் காணப்படுகின்றன.

ரூ.4 லட்சம் கோடி இழப்பு
சென்செக்ஸ் 843.79 புள்ளிகள் குறைந்து, 57,147.32 புள்ளிகளாகவும், நிஃப்டி 257.50 புள்ளிகள் குறைந்து, 16,983.50 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது. இதற்கிடையில் பி எஸ் இ பட்டியலில் உள்ள நிறுவனங்களின் சந்தை மதிப்பானது 269.8 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது கடந்த அமர்வில் 274.3 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.

ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது கடந்த அமர்வில் 82.32 ரூபாயாக முடிவடைந்திருந்தது. இந்த நிலையில் இன்றும் பெரியளவில் மாற்றமின்றி 82.32 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

முதலீடுகள் வெளியேற்றம்
தொடர்ந்து சர்வதேச அளவில் நிலவி வரும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், பொருளாதாரம் சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் முதலீட்டாளர்கள் மிக கவனமாக முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். இதற்கிடையில் சந்தையில் மீண்டும் அன்னிய முதலீடுகளானது வெளியேறத் தொடங்கியுள்ளது. இது இந்திய சந்தையில் சரிவுக்கு முக்கிய காரணமாகவும் அமைந்துள்ளது.

நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீட்டில் உள்ள ஆக்ஸிஸ் வங்கி, அதானி எண்டர்பிரைசஸ்,ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும், டிவிஸ் லேப்ஸ், இந்தஸ்இந்த் வங்கி, ஈச்சர் மோட்டார்ஸ், நெஸ்டில், ஜேஎஸ்டபள்யூ ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும் முடிவடைந்துள்ளது.

சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஆக்ஸிஸ் வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும், இந்தஸ்இந்த் வங்கி, நெஸ்டில், டாடா ஸ்டீல், இன்ஃபோசிஸ், ஹெச்.சி.எல் டெக் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும் முடிவடைந்துள்ளது.