சென்செக்ஸ் 879 புள்ளிகள் வீழ்ச்சி.. கவனத்தில் கொள்ள வேண்டிய 5 முக்கிய காரணிகள்..!

டெல்லி: அமெரிக்கா மத்திய வங்கியின் வட்டி அதிகரிப்பிற்கு பிறகு இந்திய பங்கு சந்தைகள் இன்று பலத்த சரிவினைக் கண்டுள்ளன.

சென்செக்ஸ் 879 புள்ளிகள் குறைந்து, 61,799 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது. இதே நிஃப்டியும் 18,415 என்ற லெவலில் முடிவடைந்துள்ளது.

அமெரிக்காவின் பணவீக்க விகிதமானது குறையத் தொடங்கியுள்ளது. எனினும் இது இன்னும் குறைய வேண்டும் அதுவரையில் வட்டி அதிகரிப்பானது இருக்கும் என்றும் மத்திய வங்கியானது தெரிவித்துள்ளது. இந்த போக்கானது தொடரும் பட்சத்தில் நிச்சயம் மந்த நிலையை எட்டலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

 அனைத்து இன்டெக்ஸும்  சரிவு

அனைத்து இன்டெக்ஸும் சரிவு

இந்திய சந்தைகள் ஆனது பலத்த சரிவினைக் கண்டுள்ள நிலையில், அனைத்து குறியீடுகளும் சரிவில் காணப்பட்டது. இதில் நிஃப்டி ஐடி 2% மேலாக பலத்த சரிவினைக் கண்டுள்ளது. இதே நிஃப்டி ஆட்டோ, பிஎஸ்இ ஸ்மால் கேப்,பிஎஸ்இ எஃப் எம் சி ஜி பங்குகள் 1% கீழாகவும் சரிவினைக் கண்டுள்ளன. மற்ற அனைத்து குறியீடுகளும் 1% மேலாக சரிவில் காணப்படுகின்றது.

அமெரிக்க மத்திய வங்கியின் முடிவு

அமெரிக்க மத்திய வங்கியின் முடிவு

அதெல்லாம் சரி இந்த சரிவுக்கு என்ன காரணம்? வாருங்கள் பார்க்கலாம். .

அமெரிக்காவின் மத்திய வங்கியானது 50 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது. இது அமெரிக்காவின் பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் வட்டி அதிகரிப்பால் டாலரின் மதிப்பானது ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக இந்திய சந்தையானது சரிவினைக் கண்டுள்ளது.

அமெரிக்க மத்திய வங்கியின் இந்த போக்கானது அடுத்த ஆண்டிலும் தொடரலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு 2024ல் குறைய தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 சர்வதேச சந்தைகள் சரிவு

சர்வதேச சந்தைகள் சரிவு

சர்வதேச அளவிலான பங்கு சந்தைகள் பலத்த சரிவினைக் கண்டுள்ளன. ஆசிய சந்தைகளில் முக்கிய சந்தைகள் அனைத்தும் சரிவினைக் கண்டுள்ளன. ஜப்பானின் நிக்காய், ஆஸ்திரேலியாவின் ASX 200, சீனாவின் ஷாங்காய்,, ஹாங்காங்கின் ஹேங் சேங், பிரிட்டனின் FTSE 100ம் பலத்த சரிவினைக் கண்டுள்ளன. இதே அமெரிக்க சந்தைகளும் சரிவினைக் கண்டுள்ளன. அமெரிக்காவின் டவ் ஜோன்ஸ் மற்றும் நாஸ்டாக் என பலவும் சரிவில் காணப்படுகின்றன.

எஃப் & ஓ எக்ஸ்பெய்ரி

எஃப் & ஓ எக்ஸ்பெய்ரி

எஃப் & ஓ எக்ஸ்பெய்ரியானது வரவிருக்கும் வாரங்களில் நடக்கவுள்ளது. இதன் காரணமாக சந்தையில் ஏற்ற இறக்கம் என்பது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக டெக் மற்றும் ஐடி, மெட்டல், வங்கி மற்றும் நிதி துறை சம்பந்தமான பங்குகள் அழுத்தத்தில் காணப்படுகின்றன.

டெக்னிக்கலாக எப்படியிருக்கு?

டெக்னிக்கலாக எப்படியிருக்கு?

டெக்னிக்கலாக நிஃப்டி மீண்டும் சரிவில் காணப்படுகின்றது. இது 18,400 என்ற லெவலை எட்டியுள்ளது. இது மீண்டும் சரிவினைக் காண வழிவகுக்கலாம். 18,400 என்ற லெவலில் இல்லாமல், 18,300 - 18,250 என்ற லெவலை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அன்னிய முதலீடுகள்

அன்னிய முதலீடுகள்

அன்னிய முதலீட்டாளர்கள் இன்று நிகர விற்பனையாளார்களாக இருந்தனர். இன்று மட்டும் 710.74 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்து வெளியேறியுள்ளனர். இதே உள்நாட்டு முதலீட்டாளர்கள் 260.92 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர். ஆக இதுவும் இன்று சந்தையின் போக்குக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+