நடப்பு வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் இன்று காலையிலேயே சற்று சரிவில் தான் தொடங்கியது. தொடர்ந்து சரிவில் இருந்து வரும் சந்தைகள், தற்போது 1200 புள்ளிகளுக்கு மேல் குறைந்து காணப்படுகின்றது.
இது இந்தியாவில் தற்போது இரண்டாம் கட்ட கொரோனா பரவலின் தாக்கம் மிக வேகமாக பரவி வருகின்றது. அது எந்தளவுக்கு எனில், முதன்முறையாக 24 மணி நேரத்தில் 1,03,793 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதுமட்டும் அல்லது தொடர்ந்து நான்கு நாட்களாக இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் விஸ்வரூபம் எடுத்து வருகின்றது. பலி எண்ணிக்கையும் கணிசமான அளவு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பொருளாதாரம் என்னவாகுமோ என்ற கவலையும் எழுந்துள்ளது.
கடந்த ஆண்டில் நாடு தழுவிய கொரோனா லாக்டவுன் காரணமாக பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியினை சந்தித்தது. எனினும் தர்போது பொருளாதாரம் மீண்டு வர தொடங்கியுள்ளது. பல குறியீடுகளும் சாதகமாக வந்து கொண்டுள்ளன. ஆனால் தற்போது மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இதனால் இது பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.
இதனால் முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை வெளியே எடுத்து வருவதோடு, புதிய புதிய முதலீடுகளையும் தவிர்த்து வருகின்றனர். பின்னர் தற்போது தான் பொருளாதாரம் மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில், தற்போது மீண்டும் என்னவாகுமோ என கவலையளித்துள்ளது. ஆக முதலீட்டாளர்கள் இதனையும் கவனித்து வருகின்றனர்.
தற்போது சென்செக்ஸ் 1271.30 புள்ளிகள் குறைந்து, 48,758.47 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 350.30 புள்ளிகள் குறைந்து, 14,517.05 புள்ளிகளாகவும் காணப்படுகிறது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் 33 பைசா குறைந்து 73.44 ரூபாயாக தொடங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications