சர்வதேச சந்தையின் எதிரொலியாக இன்று இந்திய பங்கு சந்தைகள் சரிவில் தான் தொடங்கியது. தொடக்கத்தில் மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 173.90 புள்ளிகள் குறைந்து 46,079.56 ஆகவும், இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 45.40 புள்ளிகள் குறைந்து, 11,512 ஆகவும் வர்த்தகமாகியது.
இதற்கிடையில் 743 பங்குகள் ஏற்றத்திலும், 557 பங்குகள் சரிவிலும், 51 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்படுகிறது.

இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் சந்தை ப்ரீ ஓபனிங் மார்கெட்டில் சற்று ஏற்றத்தில் இருந்தது கவனிக்கதக்கது.
இதற்கிடையில் அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, 73.64 ரூபாயாக தொடங்கியது. இது முந்தைய அமர்வில் 73.57 ரூபாயாக முடிவடைந்தது. கடந்த திங்கட்கிழமையன்று ரூபாயின் மதிப்பு 8 பைசா அதிகரித்து 73.57 ரூபாயாக இருந்தது. இதுவே கடந்த வெள்ளிக்கிழமையன்று 73.65 ரூபாயாக முடிவடைந்திருந்தது கவனிக்கதக்கது.
தற்போது சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகள் சரிவிலேயே காணப்படுகிறது. அதே போல சர்வதேச சந்தைகளின் குறியீடும் சரிவிலேயே காணப்படுகிறது.
குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள ஈச்சர் மோட்டார்ஸ், ஸ்ரீ சிமெண்ட்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், விப்ரோ, ஹெச்சிஎல் டெக் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், எஸ்பிஐ, டாடா மோட்டார்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, ஓஎன்ஜிசி, ஐடிசி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் காணப்படுகின்றது.
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டாடா அல்ட்ராடெக் சிமெண்ட், ஹெச்சிஎல் டெக், எம் & எம், டைட்டன் நிறுவனம், பஜாஜ் பின்செர்வ் ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், எஸ்பிஐ, ஆக்ஸிஸ் வங்கி, ஓஎன்ஜிசி, ஐடிசி, ஹெச்யுஎல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் காணப்படுகின்றது.
இன்று காலையில் சற்று சரிவில் தொடங்கி, தற்போதும் சற்று சரிவிலேயே காணப்படுகிறது. குறிப்பாக சென்செக்ஸ் 335 புள்ளிகள் குறைந்து 45,917 ஆகவும், இதே நிஃப்டி 88 புள்ளிகள் சரிந்து, 13,469 ஆகவும் காணப்படுகிறது.
இது சர்வதேச சந்தைகளில் உள்ள அழுத்தம் காரணமாகவும், புராபிட் புக்கிங் காரணமாகவும் இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், தடுப்பூசியே செயல்பாட்டுக்கு வந்தாலும், அது அனைவருக்கும் சில காலம் ஆகும் என்ற நிலையே இருந்து வருகின்றது. இதன் காரணமாகவும் சந்தைகள் சரிவில் உள்ளன.


Click it and Unblock the Notifications