இந்திய பங்கு சந்தையானது இன்று காலை தொடக்கத்திலேயே சரிவில் தொடங்கிய நிலையில், தற்போது பலத்த சரிவினைக் கானத் தொடங்கியுள்ளது.
தற்போது சென்செக்ஸ் 631.41 புள்ளிகள் குறைந்து, 61,174.78 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகின்றது. இதே நிப்டி 196.9 புள்ளிகள் குறைந்து, 18,223.55 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகின்றது.
சர்வதேச சந்தையில் தொடர்ந்து ரெசசன் அச்சம் இருந்து வரும் நிலையில், இது சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
தொடக்கம் எப்படி?
இன்று காலை தொடக்கத்திலேயே சென்செக்ஸ் 301.64 புள்ளிகள் குறைந்து, 61,604.55 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 91.10 புள்ளிகள் குறைந்து, 18,329.40 புள்ளிகளாகவும் தொடங்கியது.. இதில் 1126 பங்குகள் ஏற்றத்திலும், 850 பங்குகள் சரிவிலும், 120 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
ரூபாயின் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 82.64 ரூபாயாக தொடங்கியது. இது கடந்த அமர்வில் 82.70 ரூபாயாக முடிவடைந்திருந்தது.
இதற்கிடையில் இன்று காலை ப்ரீ ஒபனிங் சந்தையில் இந்திய சந்தையானது சரிவிலேயே காணப்பட்டது. இதுவே சந்தையில் சரிவினைக் காணலாம் என்பதற்கு அறிகுறியாகவும் பார்க்கப்பட்டது. அப்போது சென்செக்ஸ் 7.86 புள்ளிகள் குறைந்து, 61,798.33 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 2.40 புள்ளிகள் குறைந்து, 18,410.10 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
சீனாவின் கொரோனாவின் அச்சம்
சீனாவின் மீண்டும் கொரோனாவின் தாக்கமானது அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், அங்கு மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பங்கு சந்தையில் அதிக ஏற்ற இறக்கம் என்பது காணப்படுகின்றது. இதற்கிடையில் சீனாவின் வளர்ச்சியினை நிபுணர்கள் குறைத்து வருகின்றனர். இதுவும் இந்தியாவில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
அமெரிக்காவின் தாக்கம்
அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கியானது தொடர்ந்து வட்டி விகிதத்தினை அதிகரித்து வரும் நிலையில், இது மேற்கோண்டு பணவீக்கத்தினை கட்டுப்படுத்தலாம் என்றாலும், தொடர்ந்து அமெரிக்காவின் வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு ரெசசனுக்கு வழிவகுக்கலாம்,
நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீட்டில் உள்ள அதானி எண்டர்பிரைசஸ், ஆக்ஸிஸ் வங்கி, அல்ட்ராடெக் சிமெண்ட் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், ஹிண்டால்கோ, பவர் கிரிட் கார்ப், ஹெச் யு எல், பார்தி ஏர்டெல், யுபிஎல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளது.
சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் ஆக்ஸிஸ் வங்கி, அல்ட்ராடெக் சிமெண்ட் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், ஹிண்டால்கோ, பவர் கிரிட் கார்ப், ஹெச் யு எல், பார்தி ஏர்டெல், யு பி எல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications