தொடர்ந்து 50,000 மேல் வர்த்தகமாகும் சென்செக்ஸ்.. என்ன காரணம்..!

சர்வதேச சந்தையின் எதிரொலி, இந்திய பட்ஜெட் 2021 எதிரொலி காரணமாக இந்திய சந்தைகள் தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்தன. இந்த நிலையில் தற்போது சற்று சரிவினைக் காணத் தொடங்கியுள்ளது.

தொடர்ந்து 50,000 மேல் வர்த்தகமாகும் சென்செக்ஸ்.. என்ன காரணம்..!

இது புராபிட் புக்கிங் காரணமாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் தொடர்ந்து 50,000 மேலே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

அதோடு இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் சென்செக்ஸ் 24.11 புள்ளிகள் அதிகரித்து, 50,279.86 ஆகவும், இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 56.90 புள்ளிகள் அதிகரித்து, 14,846.90 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ப்ரீ ஓபனிங் சந்தையில் சற்று ஏற்றத்தில் காணப்பட்டாலும், தொடக்கத்தில் சரிவில் தான் தொடங்கியது. குறிப்பாக மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 191.40 புள்ளிகள் குறைந்து 50,064.35 புள்ளிகளாகவும், இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 48.50 புள்ளிகள் குறைந்து, 14,741.50 ஆகவும் வர்த்தகமாகியது.
தற்போது சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகள் சரிவிலேயும், சிலவை மாற்றமில்லாமலும் காணப்படுகிறது.

குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள எம்&எம், ஓஎன்ஜிசி, கெயில், ஹிண்டால்கோ, ஹீரோ மோட்டோகார்ப் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இந்தஸிந்த் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, டைட்டன் நிறுவனம், ஏசியன் பெயிண்ட்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் காணப்படுகின்றது.

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள உள்ள எம்&எம், ஓஎன்ஜிசி, என்டிபிசி, மாருதி சுசூகி, ஐடிசி டாடா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இந்தஸிந்த் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, டைட்டன் நிறுவனம், ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் காணப்படுகின்றது.

தொடக்கத்தில் சற்று சரிவில் தொடங்கி, தற்போதும் சற்று சரிவிலேயே காணப்படுகிறது. குறிப்பாக சென்செக்ஸ் 189.60 புள்ளிகள் குறைந்து 50,066.15 ஆகவும், இதே நிஃப்டி 44.95 புள்ளிகள் சரிந்து, 14,745 ஆகவும் காணப்படுகிறது.

இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 72.94 ரூபாயாக தொடங்கியுள்ளது. முந்தைய அமர்வில் 72.96 ரூபாயாக முடிவடைந்தது. இந்திய சந்தையில் புராபிட் புக்கிங் காரணமாக சந்தை சரிவினைக் கண்டு வந்தாலும், சந்தை சற்று வலுவான போக்கிலேயே காணப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+