தடுமாறும் சென்செக்ஸ், நிஃப்டி.. பதற்றத்தில் முதலீட்டாளர்கள்!

மும்பை : வாரத்தின் முதல் நாளான இன்று (செப்டம்பர்,9, 2019, 9.25 மணியளவில்) காலை மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 148 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 36,833 ஆக வர்த்தகமாகி வருகிறது. இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 43 புள்ளிகள் குறைந்து 10,902 ஆக வர்த்தகமாகி வருகிறது.

இதே டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சற்றே அதிகரித்து 71.68 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது.

தடுமாறும் சென்செக்ஸ், நிஃப்டி.. பதற்றத்தில் முதலீட்டாளர்கள்!

சர்வதேச அளவில் நிலவி வரும் பொருளாதார மந்தத்தின் காரணமாக, தொடர்ந்து இந்திய பங்கு சந்தைகளில் இருந்து, அன்னிய முதலீடுகள் வெளியேறி வருகின்றன.

இந்த நிலையில் உள்நாட்டு முதலீட்டாளர்களும், ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி கண்டு வருகிறது. மேலும் இந்திய பொருளாதாரமும் தொடர்ந்து மந்த நிலையிலேயே இருந்து வருகிறது. இதனால் சந்தைகள் சரிவையே காணும் என்ற கருத்தும், முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இதனால் தொடர்ந்து அதிகப்படியான முதலீடுகளை தவிர்த்து வருகின்றனர்.

இதனால் உள்நாட்டு முதலீட்டாளர்களும் சரி, அன்னிய முதலீடுகளும் தொடர்ந்து வெளியேறி வருகின்றன. இந்த நிலையிலேயே, வாரத்தின் தொடக்க நாளான இன்று, சந்தை சரிந்தே காணப்படுகிறது.

எனினும் நிஃப்டி குறியீட்டில் உள்ள டாடா மோட்டார்ஸ், மாருதி சுசூகி, ஈச்சர் மோட்டார்ஸ்,டாடா ஸ்டீல், ஹிண்டால் கோ உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும், குறிப்பாக ஆட்டோமொபைல் சார்ந்த பங்குகள் சற்று வீழ்ச்சியுடனே காணப்படுகின்றன.

இதே நிஃப்டி குறியீட்டில் உள்ள யு.பி.எல், சன் பார்மா, பார்தி ஏர்டெல், ஹிந்துஸ்தான் யூனிலிவர், டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும் காணப்படுகின்றன.

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள, சன் பார்மா, பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ், லார்சன், ஹிந்துஸ்தான் யூனிலிவர் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே டாடா மோட்டார்ஸ், மாருதி சுசூகி, டாடா ஸ்டீல், வேதாந்தா, ஹெச்.சி.எல் டெக் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் காணப்படுகின்றன.

இதே நிஃப்டி 50, பி.எஸ்.இ சென்செக்ஸ், நிஃப்டி பேங்க், நிஃப்டி ஐடி, நிஃப்டி ஆட்டோ இண்டெக்ஸ்கள் வீழ்ச்சி கண்டு காணப்படுகின்றன. இதுவே பி.எஸ்.இ மெட்டல்ஸ், பி.எஸ்.இ ஆயில் & கேஸ், பி.எஸ்.இ டெக் உள்ளிட்ட குறியீடுகளும் சிவப்பு நிறத்தில் காணப்படுகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+