கடந்த சில வர்த்தக அமர்வுகளாகவே தொடர்ந்து சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தொடர்ந்து புதிய உச்சத்தில் இருந்து வருகின்றன. இந்த நிலையில் இன்று சற்று ஏமாற்றம் தரும் விதமாக சரிவில் உள்ளது.
கடந்த சில வர்த்தக தினங்களாக புதிய உச்சத்தினை தொட்டு வரும் இந்திய பங்கு சந்தைகள், இன்றும் சரிவில் தான் தொடங்கியுள்ளது. இது சர்வதேச சந்தையின் எதிரொலி மற்றும் புராபிட் புக்கிங் காரணமாக இருக்கலாம் என்ற நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
இன்று சந்தை ப்ரீ ஒபனிங்லேயே சற்று சரிவில் தான் காணப்பட்டது. குறிப்பாக மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 47.24 புள்ளிகள் குறைந்து, 48,987.43 புள்ளிகளாகவும், இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 58.70 புள்ளிகள் அதிகரித்து 14,492.40 ஆகவும் இருந்தது.
தொடக்கத்திலேயே சரிவு தான்
இதனையடுத்து தொடக்கத்திலும் சரிவிலேயே தொடங்கியது. குறிப்பாக சென்செக்ஸ் 56.81 புள்ளிகள் குறைந்து 48,977.86 ஆகவும், இதே நிஃப்டி 21.70 புள்ளிகள் குறைந்து, 14,412 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 710 பங்குகள் ஏற்றத்திலும், 662 பங்குகள் சரிவிலும், 89 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
சரிவுக்கு என்ன காரணம்
சர்வதேச சந்தையின் எதிரொலியாக சர்வதேச சந்தைகள் சற்று சரிவில் தொடங்கியுள்ளன. ஆசிய சந்தைகளும் சற்று சரிவிலேயே காணப்படுகின்றன. அதிலும் ஆசிய சந்தைகளும் சற்று சரிவில் காணப்படும் நிலையில், அதுவும் இந்திய சந்தை சரிவுக்கு காரணமாக அமைந்துள்ளது. அதோடு இந்த சரிவுக்கு புராபிட் புக்கிங்கும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
நிஃப்டி குறியீட்டில் உள்ள பங்குகள்
இதற்கிடையில் நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் குறியீடுகளில் அனைத்தும் சிவப்பு நிறத்திலேயே உள்ளன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள யுபிஎல், ஹெச்டிஎஃப்சி வங்கி, விப்ரோ, ஹெச்சிஎல் டெக், ஹெச்யுஎல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், கோல் இந்தியா, ஹிண்டால்கோ, ஜேஎஸ்டபள்யூ ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பங்குகள்
இதே சென்செக்ஸ் குறியீட்டில் ஹெச்டிஎஃப்சி வங்கி, ஹெச்சிஎல் டெக், டிசிஎஸ், டெக் மகேந்திரா, ஹெச்யுஎல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே பவர் கிரிட் கார்ப், பஜாஜ் பைனான்ஸ், ஓஎன்ஜிசி, பஜாஜ் பின்செர்வ், இந்தஸிந்த் பேங்க் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
தற்போதைய நிலவரம்
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 306.47 புள்ளிகள் குறைந்து, 48,728.20 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 117.30 புள்ளிகள் குறைந்து, 14,316.40 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.
இதே அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது முந்தைய அமர்வில்73.12 ரூபாயாக முடிவடைந்தது. இந்த நிலையில் இன்று தொடக்கத்தில் 10 பைசா வீழ்ச்சி கண்டு 73.22 ரூபாயாக தொடங்கியுள்ளது. இது ஈக்விட்டி சந்தையில் செல்லிங் பிரசர் அதிகம் இருப்பதால் சற்று வீழ்ச்சி கண்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?



Click it and Unblock the Notifications