1600 புள்ளிகள் வரை சென்செக்ஸ் வீழ்ச்சி.. மோசமான நிலையில் மும்பை பங்குச்சந்தை..!

திங்கட்கிழமை வர்த்தகத்தில் ஆரம்பம் முதலே மந்தமான வர்த்தகத்தை எதிர்கொண்ட மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு உலக நாடுகளில் புதிதாக உயர்ந்து வரும் கொரோனா தொற்று, பிரிட்டனில் இருந்து பிற நாடுகளுக்குத் தடை செய்யப்பட்ட விமானப் பயணங்களின் அறிவிப்புகள் ஆசிய வர்த்தகச் சந்தையைப் பெரிய அளவில் பாதித்தது.

இதன் எதிரொலியாக இந்தியச் சந்தையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமார் 1600 புள்ளிகள் வரையில் வீழ்ச்சி அடைந்தது சென்செக்ஸ. இதன் வாயிலாகச் சந்தையில் டாப் 30 நிறுவனங்கள் அனைத்தும் பெருமளவிலான வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளது.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

திங்கட்கிழமை காலையில் சென்செக்ஸ் குறியீடு 46,932 புள்ளிகளில் வர்த்தகத்தைத் துவங்கிய நிலையில், இன்றைய வர்த்தகத்தில் மிகவும் மோசமாக 44,923 புள்ளிகளை அடைந்தது. இதுமட்டும் அல்லாமல் சந்தையில் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் ஓஎன்ஜிசி பங்குகள் அதிகப்படியாகச் சுமார் 9 சதவீத வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளது.

இதோடு சந்தையில் டாப் நிறுவனங்கள் அனைத்தும் அதிகளவிலா வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ள காரணத்தால் முதலீட்டாளர்கள் இன்று பெருமளவிலான வீழ்ச்சியைச் சந்தித்தனர்.

 

நிப்டி வீழ்ச்சி

நிப்டி வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தில் நிஃப்டி குறியீடு கிட்டத்தட்ட 500 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து முதலீட்டாளர்களுக்கு மோசமான சரிவைக் கொடுத்துள்ளது.

மேலும் என்எஸ்ஈ சந்தையில் பொதுத்துறை வங்கிகள் மற்றும் மீடியா நிறுவனங்கள் 6.98 சதவீதம் சரிவை அடைந்து முதலீட்டாளர்களுக்குப் பெரிய நஷ்டத்தைக் கொடுத்துள்ளது.

 

ஐரோப்பியச் சந்தை

ஐரோப்பியச் சந்தை

பிரிட்டன் நாட்டின் கொரோனா தடுப்பு மருந்து மக்களுக்கு அளிக்கப்பட்டு வரும் நிலையில் அந்நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மொத்த ஐரோப்பிய நாடுகளுக்கும் பிரிட்டன் விமானங்கள், பிரிட்டன் விமானப் பயணிகள் வருவதற்குத் தடை விதித்துள்ளது.

இதன் ஐரோப்பியச் சந்தையில் அதிகளவிலான சரிவிற்குத் தள்ளியுள்ளது.

 

கட்டுப்படுத்த முடியாத புதிய வைரஸ்

கட்டுப்படுத்த முடியாத புதிய வைரஸ்

இதேபோல் பிரிட்டன் நாட்டில் புதிதாகப் பரவி வரும் கொரோனா தொற்றில் பாதிப்பு ஏற்பட்டவர்களில் 70 சதவீதம் பேர் தொற்றைப் பரப்பும் அளவில் இருப்பதாகவும் பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன் உலக நாடுகளுக்குத் தெரிவித்துள்ளார்.

இதேபோல் பிரிட்டன் சுகாதாரத் துறை அமைச்சர் புதிய வைரஸ் கட்டுப்படுத்த முடியாத அளவில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

 

அமெரிக்கா சந்தை

அமெரிக்கா சந்தை

இதேபோல் அமெரிக்காவிலும் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் இதேவேளையில், அந்நாட்டின் பொருளாதாரத் தரவுகள் பெரிய அளவிலான வீழ்ச்சியை எதிர்கொண்டு உள்ளது.

அமெரிக்கச் சந்தையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி உலக நாடுகளை அதிகளவில் பாதிப்பும் என எதிர்பார்க்கும் காரணத்திற்காக, அமெரிக்காவில் திங்கட்கிழமை வர்த்தகம் துவங்குவதற்கு முன்பாக ஆசியச் சந்தையில் வீழ்ச்சி அடைந்துள்ளது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+