2017ஆம் ஆண்டில் மும்பை பங்குச்சந்தை அவ்வப்போது சரிவை சந்தித்தாலும் மீண்டும் இயல்பு நிலைக்கும் திரும்புவதாகவே இருந்தது. ஆனால் இந்த வருடம் எப்போது சந்தித்திராத வகையில் கடந்த 7 நாட்களாகத் தொடர்ந்து மும்பை பங்குச்சந்தை சரிவிலேயே உள்ளது.
இந்திய பொருளாதாரத்தின் வீழ்ச்சி, புதிய வேலைவாய்ப்புகள் எண்ணிக்கையில் சரிவு, அமெரிக்கப் பெடரல் வங்கியின் வட்டி உயர்வு அறிகுறிகள், அமெரிக்கா வட கொரியா மத்தியில் நிலவும் பதற்றம், ஆகியவற்றுடன் இன்று இந்திய ராணுவம் மியான்மர் எல்லையில் நடத்திய திடீர் தாக்குதல் மூலம் மும்பை பங்குச்சந்தை கூடுதலான சரிவை சந்தித்துள்ளது.
ராணுவ தாக்குதல்..
புதன்கிழமை காலையில் இந்திய ராணுவம் மியான்மர் எல்லையில் நாகா தீவிரவாதிகள் மீது தாக்குதலை நடத்தியது. இந்திய மியான்மர் எல்லையில் தீவிரவாதிகள் முதலில் தாக்குதல் நடத்திய நிலையில், இந்தி ராணுவம் மறு தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்தத் தாக்குதல் சுமார் 2 மணிநேரம் நீடித்தது என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
சரிவுடன் துவக்கம்..
ராணுவ தாக்குதல் குறித்த அறிவிப்புகள் வெளியான காரணத்தால் இன்று வர்த்தகத் துவக்கத்தில் உயர்வுடன் துவங்கிய வர்த்தகம் சில நிமிடங்களில் மளமளவெனச் சரிந்தது.
உலகச் சந்தைகள்
இதன் ஆசிய, ஐரோப்பிய சந்தைகளும் மந்தமான வர்த்தகத்தைப் பெற்ற காரணத்தினால், 200 புள்ளிகளுக்கும் அதிகமான சரிவை சந்தித்தது மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு.
பன்னாட்டு முதலீட்டாளர்கள்
இந்திய பொருளாதாரத்தின் வீழ்ச்சி மற்றும் அதனை ஈடு செய்ய மத்திய அரசு செலவிடும் 50,000 கோடி ரூபாய் பன்னாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் இந்திய பங்குச்சந்தையில் இருந்த முதலீட்டை தொடர்ந்து பன்னாட்டு முதலீட்டாளர்கள் வெளியேற்றி வருகின்றனர்.
ரூபாய் மதிப்பு
இந்திய சந்தையில் இருந்து பன்னாட்டு முதலீட்டாளர்கள் செய்த முதலீடுகள் தொடர்ந்து குறைந்து வரும் காரணத்தால், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 65.72 ரூபாய் வரை சரிந்துள்ளது.
சென்செக்ஸ்
இதன் எதிரொலியாக இன்றயை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 439.95 புள்ளிகள் சரிந்து 31,159.81 புள்ளிகளை அடைந்தது.
நிஃப்டி குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டை போலவே தொடர்ந்து சரிவை சந்தித்த நிஃப்டி குறியீடு 135.75 புள்ளிகள் சரிந்து 9,735.75 புள்ளிகளை அடைந்து புதன்கிழமை வர்த்தகம் முடிவிற்கு வந்தது.


Click it and Unblock the Notifications