இன்று மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் தொடர்ந்து உயர்வான நிலையிலேயே இருந்த நிலையில் வங்கிகளின் வராக்கடன் அளவு வரலாறு காணாத அளவான 9.5 லட்சம் கோடி ரூபாய் அளவீட்டை எட்டிய நிலையில், பன்னாட்டு முதலீட்டாளர்கள் வர்த்தக முடிவில் அதிகளவிலான முதலீட்டை வெளியேற்றினர்.
இதோடு நிறுவனங்களின் செப்டம்பர் மாத காலாண்டு முடிவுகள் ஜிஎஸ்டி தாக்கத்தின் காரணமாக மந்தமாகவே இருக்கும் எனக் கணிப்புகள் வெளியானது முதலீட்டாளர்கள் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

மேலும் இந்த வாரத்தில் டிசிஎஸ் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 90.42 புள்ளிகள் சரிந்து 31,833.99 புள்ளிகளை அடைந்துள்ளது. இதேபோல் நிஃப்டி குறியீடு 32.15 புள்ளிகள் சரிந்து 9,984.80 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications