உலகின் முன்னணி பொருளாதார நாடுகளான சீனா மற்றும் ஐரோப்பியாவில் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள லாக்டவுன் முதலீட்டுச் சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாகப் பங்குச்சந்தையில் இதன் எதிரொலி மிகவும் மோசமான நிலையைப் பதிவு செய்துள்ளது.
இதோடு அமெரிக்காவில் ஜோ பிடன் அதிபராகப் பதவியேற்க உள்ள நிலையில், 1.9 டிரில்லியன் டாலர் மதிப்பிலான பொருளாதார ஊக்கத் திட்டம் அமல்படுத்த உள்ளது. இது இரண்டும் சர்வதேச பங்குச்சந்தையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்த உள்ளது.

இதன் எதிரொலியாக இன்று மும்பை பங்குச்சந்தை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 549.49 புள்ளிகள் சரிந்து சுமார் 1.11% சரிவைப் பதிவு செய்துள்ளது. மேலும் சென்செக்ஸ் குறியீட்டைப் போலவே நிப்டி குறியீடு 161.90 புள்ளிகள் சரிந்து சுமார் 1.11% சரிவைப் பதிவு செய்துள்ளது. இதோடு இன்றைய வர்த்தகத்தில் அதிகப்படியாகச் சென்செக்ஸ் 860 புள்ளிகளும், நிஃபடி 260 புள்ளிகளும் சரிந்து முதலீட்டாளர்களை அதிர்ச்சியைக் கொடுத்தது.
மேலும் சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் 26 நிறுவனங்கள் இன்று சரிவை எதிர்கொண்டுள்ளது. இதில் அதிகப்படியாக டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல் டெக், ஓஎன்ஜிசி, அல்ட்ராடெக், ஹெச்டிஎப்சி ஆகியவை அதிகளவிலான சரிவை எதிர்கொண்டது.
2020ல் அதிக லாபத்தை அள்ளிக்கொடுத்த ஐடி நிறுவனங்கள் இன்று லாப நோக்கத்தில் முதலீட்டாளர்கள் அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்த காரணத்தால் இன்று டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல் டெக் பங்குகள் அதிகச் சரிவைப் பதிவு செய்தது.
இதேவேளையால் டாடா மோட்டார்ஸ் பங்குகள் 28 மாத உயர்வையும், பார்தி ஏர்டெல் 4 சதவீத உயர்வையும், வோடபோன் 10 சதவீத உயர்வையும் பதிவு செய்துள்ளது. மேலும் கெயில் நிறுவனம் பைபேக் திட்டத்தை அறிவித்தும் 5 சதவீத சரிவைப் பதிவு செய்துள்ளது.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?



Click it and Unblock the Notifications