மத்திய அரசு மற்றும் ஆர்பிஐ இடையிலான உரசல் போக்கிற்குத் திங்கட்கிழமை நடைபெற்ற 9 மணி நேர வாரிய கூட்டத்தினை அடுத்து சுமுக முடிவு காணப்பட்ட நிலையில் மூன்று செஷன்களாக உயர்ந்து வந்த பங்கு சந்தைக் குறியீடுகள் செவ்வாய்க்கிழமை சரிவுடன் முடிவடைந்துள்ளது.

இன்றைய சந்தை நிலவரம்
சந்தை முடியும் போது மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 300.37 புள்ளிகள் என 0.84 சதவீதம் சரிந்து 35,474.51 புள்ளியாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 107.20 புள்ளிகள் என 1 சதவீதம் சரிந்து 10,656.20 புள்ளியாகவும் வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.
ஐடி, மெட்டல், பார்மா என அனைத்து முக்கியத் துறைகளின் குறியீடுகளும் நட்டத்துடன் சந்தையினை முடித்துக்கொண்டன.
ஐடி நிறுவனப் பங்குகள் சரிவுக்கு அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்ததே காரணம் ஆகும். ஐடி நிறுவனங்களைப் பொறுத்தவரையில் விப்ரோ, டெக் மஹிந்தரா, எச்சிஎல் டெக்னாலஜிஸ், என்ஐஐடி டெக்னாலஜிஸ், மைண்ட் ட்ரீ, இன்போசிஸ் மற்றும் டிசிஎஸ் பங்குகள் 1 முதல் 3.5 சதவீதம் சரிந்தன.
மென்பொருள் நிறுவனங்களுக்கு டாலர் மூலமாகவே அதிக வருவாய் வருவது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச அளவில் முதலீட்டாளர்களின் மனநிலை பங்குகளை விற்றுப் பணம் பார்ப்பது என்று இருந்ததும் இன்றைய சந்தை சரிவுக்குக் காரணம் ஆகும்.


Click it and Unblock the Notifications
