சென்செக்ஸ், நிஃப்டி சரிவு.. ஓரே நாளில் ரூ.2.02 லட்சம் கோடி இழப்பு.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..!

சர்வதேச சந்தைகளில் கலவையான வர்த்தகச் சூழ்நிலைக்கு மத்தியில் மும்பை பங்குச்சந்தை குறியீடுகள் புதன்கிழமை வர்த்தகத்தில் பெரும் சரிவை பதிவு செய்தது.

மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு சுமார் 636.75 புள்ளிகள் சரிந்து 60,657.45 புள்ளிகளை எட்டியுள்ளது. இதேபோல் என்எஸ்இ சந்தையின் நிஃப்டி 189.60 புள்ளிகள் சரிந்து 18,042.95 ஆகவும் சரிந்துள்ளது.

மும்பை பங்கு சந்தைகளில் ஏற்பட்ட சரிவு மும்பை பங்குச்சந்தையில் சந்தை மூலதன மதிப்பு சுமார் 2.02 லட்சம் கோடி ரூபாய் அளவிலான இழப்பைப் பதிவு செய்துள்ளது.

சீனா

சீனா

மும்பை பங்கு சந்தையின் இந்தச் சரிவுக்கு மிகவும் முக்கியமான காரணம் சீனாவில் அதிகரித்து வரும் கோவிட்-19 தொற்று எண்ணிக்கை மூலம் உற்பத்தி பொருட்களில் உருவாகும் பற்றாக்குறை மற்றும் பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி உயர்வு பாதை குறித்து முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகப்படியான அச்சம் உருவாகியுள்ளது.

அமெரிக்கா

அமெரிக்கா

அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ்-ன் டிசம்பர் மாத கூட்டத்தின் முடிவுகள் மற்றும் மாற்றங்கள் குறித்த அறிவிப்பு இன்று வெளியாக உள்ளது. இதன் எதிரொலியாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேற்றியுள்ளனர், இதன் வாயிலாக மும்பை பங்குச்சந்தை சந்தை மதிப்பு 2.02 லட்சம் கோடி குறைந்து 284.66 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 282.64 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

இன்றைய வர்த்தகத்தில் அனைத்து முக்கியக் குறியீடுகளும் சரிவை சந்தித்துச் சிவப்பு நிறத்தில் காட்சி அளித்தது. இதில் முக்கியமான நிஃப்டி நெக்ஸ்ட் 50 1.04% சரிந்தது, நிஃப்டி மிட்கேப் 50 1.10% சரிந்தது, நிஃப்டி லார்ஜ் மிட்கேப் 250 1% சரிந்தது மற்றும் நிஃப்டி மொத்த சந்தை 1.06% சரிந்தது.

துறைவாரியான குறியீடு

துறைவாரியான குறியீடு

மேலும் பிற துறை வாரியான நிஃப்டி குறியீடுகளும் சரிவில் முடிந்தது. நிஃப்டி வங்கி 1.07%, நிஃப்டி ஐடி 0.98% மற்றும் நிஃப்டி எஃப்எம்சிஜி 0.66% சரிந்தன. இதைத் தொடர்ந்து நிஃப்டி சந்தையின் தடுமாற்றத்தைக் கணிக்கும் இந்தியா VIX குறியீடு 5.64% உயர்ந்தது.

டாப் 30 நிறுவனங்கள்

டாப் 30 நிறுவனங்கள்

சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், விப்ரோ, பவர் கிரிட், இன்ஃபோசிஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் எச்டிஎஃப்சி ஆகியவை சரிந்தது. மாருதி சுசுகி மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மட்டுமே உயர்வுடன் முடிந்தது.

ஆசிய சந்தை

ஆசிய சந்தை

இந்திய பங்குச்சந்தை மட்டும் தான் இப்படியா என்றால் இல்லை, ஆசிய சந்தைகளில் முக்கியமாகச் சியோல், ஷாங்காய் மற்றும் ஹாங்காங்கில் பங்குச் சந்தைகள் உயர்வுடன் முடிவடைந்தாலும், இதே நேரத்தில் டோக்கியோ சந்தை சரிவுடன் முடிவடைந்துள்ளது.

ஐரோப்பிய சந்தை

ஐரோப்பிய சந்தை

ஐரோப்பிய பங்கு பரிவர்த்தனைகள் நடுத்தர அமர்வு ஒப்பந்தங்களில் லாபகரமான வர்த்தகத்தைப் பதிவு செய்து வருகிறது, ஆனால் 2023ல் அதிகப் பாதிப்பை சந்திக்கக் கூடிய சந்தையாக ஐரோப்பா உள்ளது. செவ்வாய்க்கிழமை அமெரிக்கப் பங்குச்சந்தை வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது.

கச்சா எண்ணெய், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள்

கச்சா எண்ணெய், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள்

சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் பெஞ்ச்மார்க் பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 1.86 சதவீதம் குறைந்து 80.57 அமெரிக்க டாலராக வர்த்தகம் செய்யப்படுகிறது. இதேபோல் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) செவ்வாய்க்கிழமை மட்டுமே சுமார் 628.07 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்து முதலீட்டை வெளியேற்றியுள்ளனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+