மும்பை: இந்தியப் பங்குச் சந்தையின் முக்கிய குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக பெரும் சரிவுடன் துவங்கியது. அமெரிக்கப் பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்படும் என்ற அச்சம் உலகளாவிய சந்தைகளை தலைகீழாகப் புரட்டிப்போட்டதன் விளைவாக இந்தியப் பங்குச்சந்தை இன்று அதிகளவில் சரிந்துள்ளது. அமெரிக்காவில் வேலைவாய்ப்பின்மை அளவு ஜூன் மாதத்தில் 4.1 சதவீதமாக இருந்த நிலையில் ஜூலை மாதத்தில் 4.3 சதவீதமாக உயர்ந்ததன் விளைவாக அந்நாட்டில் ரெசிஷன் வரும் என்ற அச்சம் அதிகரித்துள்ளது.
வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவை ஒப்பிடுகையில் திங்கட்கிழமை வர்த்தகத்தில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் சந்தை மதிப்பு சுமார் ரூ.10.24 லட்சம் கோடி குறைந்து ரூ.446.92 லட்சம் கோடியாகச் சுருங்கியது. முந்தைய நாள் மதிப்பீடு ரூ.457.16 லட்சம் கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

நிஃப்டி 520 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 24,192.50 என்ற நிலையிலும், சென்செக்ஸ் குறியீடு வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் 80,981.95 புள்ளிகளில் முடிந்த நிலையில் இன்று காலை வர்த்தகத்தில் 2400 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 78,580.46 என்ற நிலையை அடைந்துள்ளது. இந்த மாபெரும் வீழ்ச்சிக்கு அமெரிக்காவில் 4 மாதங்களாக அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மை மிக முக்கியமான காரணமாக உள்ளது.
மேலும் அமெரிக்காவின் பொருளாதாரம் ரெசிஷனில் மூழ்க அடுத் 12 மாதத்தில் 15 முதல் 25 சதவீதம் வரையில் வாய்ப்புள்ளதாக அந்நாட்டின் பிரபலமான முதலீட்டு வங்கியான கோல்டுமேன் சாக்ஸ் அறிவித்துள்ளது. இதன் மூலம் அமெரிக்க மத்திய வங்கி செப்டம்பர் கூட்டத்தில் தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகளையும், நவம்பர் கூட்டத்தில் 50 அடிப்படை புள்ளிகளையும் குறைக்கும் என ஜேபி மோர்கன் கணித்துள்ளது.
இதேவேளையில் மத்திய கிழக்கு நாடுகள் மத்தியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றமான சூழ்நிலை, பங்குச்சந்தைக்குக் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய இந்தியப் பங்குச்சந்தை குறியீடுகளின் வீழ்ச்சிக்கு உள்நாட்டுக் காரணங்களைக் காட்டிலும் வெளிநாட்டுச் சந்தைகள் அதிகப்படியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாரத்தின் முதல் நாள் வர்த்தகத்தில் டாடா மோட்டார்ஸ், அதானி போர்ட்ஸ், மஹிந்திரா, எஸ்பிஐ, JSW ஸ்டீல் மற்றும் டைட்டன் போன்ற பங்குகள் சென்செக்ஸ் குறியீட்டில் அதிக இழப்பு ஏற்படுத்திய பங்குகளாகும். அதிகப்படியாக இப்பங்குகளின் விலை 5.04% வரை சரிந்தது. சென்செக்ஸ் பங்குகளில் 30-ல் 28 பங்குகள் வீழ்ச்சியில் வர்த்தகம் நடந்தன.
நிஃப்டி 50 குறியீட்டில் 46 பங்குகள் வீழ்ச்சியில் வர்த்தகமாகின, இதில் முக்கியமான டாட்டா மோட்டார்ஸ், இன்டிகோ, ஓஎன்ஜிசி, ஸ்ரீராம் பைனான்ஸ் மற்றும் JSW ஸ்டீல் ஆகியவை அதிகப்படியான சரிவைச் சந்தித்தது.
காலை 10 மணி அளவில் பிஎஸ்சியில் 88 பங்குகள் இன்று 52 வார உச்சத்தைத் தொட்டன. மறுபுறம், 42 பங்குகள் 52 வாரச் சரிவை எட்டின. காலை வர்த்தக நேரத்தில் பங்குச் சந்தை கடுமையாக வீழ்ச்சியடைந்ததால் சுமார் 103 பங்குகள் அதிகபட்ச சுற்றுகளை எட்டின. மறுபுறம், 197 பங்குகள் குறைந்தபட்ச சுற்றுகளை எட்டியது, சந்தையில் பலவீனமான உணர்வைக் காட்டியது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications