குஜராத், ஹிமாச்சல பிரதேசம் மாநில தேர்தல்களில் பிஜேபி வெற்றிபெற்றுள்ள நிலையில் திங்கட்கிழமை போல் அல்லாமல் இன்று காலை வர்த்தகம் உயர்வுடன் துவங்கியது.
மத்தியில் ஆளும் பிஜேபியின் வெற்றி மூலம் அடுத்தச் சில மாதங்களுக்கு மும்பை பங்குச்சந்தையில் உயர்வுடன் காணப்படும் எனத் தெரிகிறது. மேலும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சந்தை முதலீட்டாளர்கள் இன்று அதிகளவில் முதலீடு செய்துள்ளனர்.
மும்பை பங்குச்சந்தை
இன்றைய வர்த்தகம் துவங்கும் போது 130 புள்ளிகள் உயர்வுடன் துவங்கிய மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு, திங்கட்கிழமை தவறவிட்ட புதிய உச்சத்தின் இலக்கு இன்றும் அடையும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில்.
மதிய நேர வர்த்தகம் வரையில் பெரிய அளவிலான மாற்றம் இல்லை.
ஐரோப்பிய சந்தை
இந்நிலையில் ஐரோப்பிய சந்தையின் வர்த்தகம் நேற்று பங்குச்சந்தை வர்த்தகத்தைக் கணிசமாகப் பாதித்த நிலையில், இன்று ஐரோப்பிய சந்தையின் துவக்கத்தில் மளமளவென உயரத் துவங்கியது.
புதிய உச்சம்
இன்றைய வர்த்தகம் உயரும் வரையில் தொடர்ந்து உயர்வான பாதையில் இருந்த மும்பை பங்குச்சந்தை 33,861 புள்ளிகள் வரையில் உயர்ந்து. ஆனால் தனது உச்ச நிலையிலான 33,865.95 புள்ளிகளை அடையத் தவறியது.
சென்செக்ஸ்
செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 33,836.74 புள்ளிகளை அடைந்தது இன்றைய வர்த்தகம் முடிந்தது.
நிஃப்டி
சென்செக்ஸ் குறியீட்டை போல் நிலையான வர்த்தக உயர்வு பெற்ற நிஃப்டி குறியீடு இன்றைய வர்த்தக முடிவில் 74.45 புள்ளிகள் உயர்ந்து 10,463.20 புள்ளிகளை அடைந்தது.
முக்கிய நிறுவனங்கள்
மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் இன்று மாருதி, ஹீரோமோட்டோ கார்ப், டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ, பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான வளர்ச்சியை அடைந்தது.
அதேபோல் இன்போசிஸ், விப்ரோ, இன்டஸ்இந்த் வங்கி, கோட்டாக் மஹிந்திரா வங்கி, எச்டிஎப்சி ஆகிய நிறுவனங்கள் சரிவை சந்தித்தது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications