முதலீட்டாளர்கள் வர்த்தகப் போர் மீது இருந்து வந்த தங்களது பார்வைகளைக் கார்ப்ரேட் வருவாய் மீது திருப்பியுள்ளதால் இந்திய பங்கு சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிப்டி இரண்டும் திங்கட்கிழமை சந்தை நேர முடிவில் லாபத்துடன் நிறைவைச் செய்தன.
வெள்ளிக்கிழமை சந்தை முடிந்த போது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 968.18 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று இருந்த நிலையில், உள்ளூர் முதலீட்டாளர்கள் 1,480.82 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கி இருந்தனர். அமெரிக்க டாலருக்கு எதிரான இந்தியா ரூபாய் மதிப்பும் சரிவில் இருந்து இன்று மீண்டுள்ளது. எனவே இன்றைய பங்கு சந்தை நிலவரத்தினை இங்குப் பார்க்கலாம்.
பங்கு சந்தை நிலவரம்
சந்தை நேர முடிவில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 276.86 புள்ளிகள் என 0.78 சதவீதம் உயர்ந்து 35,934 புள்ளிகளாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 50.25 புள்ளிகள் என 0.74 சதவீதம் உயர்ந்து 10,852.90 ரூபாயாகவும் வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.
துறை வாரியான சந்தை நிலவரம்
கேப்பிட்டல் கூட்ஸ், எனர்ஜி, தொழிற்சாலைகள், யூட்டிலிட்டிஸ், மெட்டல், பவர், ஹெல்த்கேர் மற்றும் எண்ணெய் நிறுவனப் பங்குகள் லாபத்தினை அளித்துள்ளன. அதே நேரம் ஐடி, வங்கி, சுரங்கம் போன்ற துறை சார்ந்த பங்குகள் சரிந்தும் காணப்பட்டன.
லாபம் அளித்த பங்குகள்
வேதாந்தா, ஏசியன் பெயிண்ட்ஸ், யெஸ் வங்கி, சன் பார்மா, ரிலையன்ஸ், ஆக்சிஸ் வங்கி, பவர் கிரிட் பங்குகள் லாபத்தினை அளித்துள்ளன.
நட்டம் அளித்த பங்குகள்
டிசிஎஸ், எச்டிஎப்சி, பார்தி ஏர்டெல், இண்டஸ் இண்ட் வங்கி, கோல் இந்தியா, பஜாஜ் ஆட்டோ நிறுவன பங்குகள் சரிந்துள்ளன.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications