ரிலையன்ஸ் ஜியோ தனது சேவை கட்டணத்தை உயர்த்தியதன் மூலம் இன்று டெலிகாம் நிறுவனங்களின் அதிக முதலீடு குவிந்ததது, இதை தொடர்ந்து ஜப்பான் நாட்டின் தேர்தலில் மீண்டும் ஜின்சோ அபேவின் கட்சி வெற்றிபெற்றுள்ள நிலையில், யென் மதிப்பு குறைவாக இருந்த போதிலும் உயர்வை சந்தித்தது.
இதன் மூலம் இன்றைய வர்த்தக துவக்கத்தில் உயர்வை சந்தித்த மும்பை பங்குச்சந்தை 12 மணியளவில் சரிவை சந்தித்தது.
ஐரோப்பிய சந்தை
மதியம் 1.30 வரையிலான காலத்தில் சென்செக்ஸ் குறைவான வர்த்தகத்தை மட்டுமே பெற்ற சென்செக்ஸ் குறியீடு ஐரோப்பிய சந்தையின் துவக்கத்தில் மீண்டும் உயர்வடைய துவங்கியது.
சென்செக்ஸ்
இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 116.76 புள்ளிகள் உயர்ந்து 32,506.72 புள்ளிகளை அடைந்தது.
திங்கட்கிழமை காலை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 32,600 புள்ளிகள் வரை உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்தது.
நிஃப்டி
சென்செக்ஸ் குறியீட்டை போல் மதியம் 1.30 மணிக்கு மேல் உயர துவங்கிய நிஃப்டி குறியீடு 38.30 புள்ளிகள் உயர்ந்து 10,184.85 புள்ளிகளை அடைந்துள்ளது.
முக்கிய நிறுவனங்கள்
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் எஸ் அண்டி பி குறியீட்டில் இருக்கும் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ், விப்ரோ, ஐசிஐசிஐ வங்கி, அதானி போர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான உயர்வை அடைந்தது.
அதிக நஷ்டத்தை அடைந்த நிறுவனங்கள் பற்றி தெரிந்துக்கொள்ள இதை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications