அமெரிக்கா சீனா இடையிலான வர்த்தகப் போர் நாளுக்கு நாள் தீவரம் அடைந்து வரும் நிலையில், சர்வதேச சந்தையில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக முன்னணி வர்த்தகச் சந்தையில் இருக்கும் டெக் நிறுவனங்கள் அதிகளவிலான சரிவை சந்தித்தது.
மேலும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அமேசானுக்கு எதிராகச் செய்து வரும் டிவீட்களால் இந்நிறுவன முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குச்சந்தையை விட்டு வெளியேறி வருகின்றனர்.
மும்பை பங்குச்சந்தை
இன்று காலையில் அமெரிக்கச் சீன வர்த்தகப் போர் பதற்றத்தின் காரணமாக மந்தமான வர்த்தகத்தை மட்டுமே பதிவு செய்து வந்த மும்பை பங்குச்சந்தை, ஐரோப்பிய சந்தை துவங்கியதில் வங்கி பங்குகள் மீது அதிகளவிலான முதலீடு குவிந்தது.
ரிசர்வ் வங்கி
இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டம் வருகிற வியாழக்கிழமை நடக்க உள்ள நிலையில், வட்டி விகிதங்களில் மாற்றம் இருக்காது எனக் கணிப்புகள் வெளியாகியுள்ளது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் வங்கி பங்குகள் மீது முதலீடு செய்ய ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 115.27 புள்ளிகள் உயர்ந்து 33,370.63 புள்ளிகளை அடைந்துள்ளது. அதேபோல் நிஃப்டி குறியீடு 33.20 புள்ளிகள் உயர்ந்து 10,245.00 புள்ளிகளை அடைந்துள்ளது.
முக்கிய நிறுவனங்கள்
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் ஐசிஐசிஐ வங்கி, மஹிந்திரா, யெஸ் வங்கி, பவர் கிரிட், பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான உயர்வை அடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications