காலை இந்திய பங்கு சந்தை துவங்கிய உடன் சென்செக்ஸ், நிப்டி இரண்டும் சரிவை நோக்கிச் சென்ற நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டத்தில் வட்டி விகித உயர்வு எதிர்பார்ப்பு போன்ற காரணங்களை மீண்டும் உயர்வில் முடிந்தது.
ஐரோப்பிய சந்தை, ஆசிய சந்தை மந்தமாக வர்த்தகம் செய்யப்பட்ட நிலையில் இன்றைய பங்கு சந்தையின் நிலவரம் என்ன என்று இங்குப் பார்க்கலாம்.
இன்றைய சந்தை நிலவரம்
சந்தை நேர முடிவில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 112.18 புள்ளிகள் என 0.30 சதவீதம் உயர்ந்து 37,606.58 புள்ளிகளாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 36.95 புள்ளிகள் என 0.33 சதவீதம் உயர்ந்து 11,356.50 புள்ளிகளாகவும் வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.
துறை வாரியான நிலவரம்
மும்பை பங்கு சந்தையினைப் பொறுத்துவரையில் எனர்ஜி, நுகர்வோர் சாதனங்கள், ரியாலிடி மற்றும் கேப்பிட்டல் கூட்ஸ் உள்ளிட்ட துறைகள் நல்ல லாபம் அளித்துள்ளன. அதே நேரம் வங்கி, பினான்ஸ், யூட்டிலில்ட்டி உள்ளிட்ட துறைகள் நட்டத்தினை அளித்துள்ளன.
லாபம் அளிக்கும் நிறுவனங்கள்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹீரோ மோட்டோ கார்ப், டாக்ட்டர் ரெட்டிஸ், டெக் மகேந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் லாபம் அளித்துள்ளன.
நட்டம் அளித்த நிறுவனங்கள்
ஆக்சிஸ் வங்கி, எச்டிஎப்சி, எஸ்பிஐ, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் நட்டத்தினை அளித்துள்ளன.


Click it and Unblock the Notifications