குஜராத் மற்றும் ஹிமாச்சல் பிரதேச மாநிலங்களில் தேர்தல் வாக்குப் பதிவு முடிந்துள்ள நிலையில், வியாழக்கிழமை மாலை எக்ஸிட் போல் வெளியானது.
இது பிஜேபி கட்சியின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் இருக்கும் காரணத்தால் முதலீட்டாளர்கள் மத்தியில் இன்றும் இந்திய சந்தையின் மீதான நம்பிக்கை அதிகரித்து.
இதன் காரணமாகக் காலை வர்த்தகத் துவக்கத்திலேயே 200 புள்ளிகளுக்கும் அதிகமான வளர்ச்சியை அடைந்தது.
எக்ஸிட் போல்
குஜராத் தேர்தலின் வாக்குப்பதிவுகள் முடிந்துள்ள நிலையில், வியாழக்கிழமை மாலையில் எக்ஸிட் போல் வெளியானது, வழக்கம் போல் இந்த முறையும் பிஜேபி அதிக இடத்தில் வெற்றி பெறும் என ஆய்வுகள் கூறப்படுகிறது. அதேபோல் 2012ஆம் ஆண்டுத் தேர்தலை விடவும் காங்கிரஸ் வாக்கு வங்கியின் அளவும் குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்துள்ளது.
மும்பை பங்குச்சந்தை
இன்றைய வர்த்தகச் சந்தையின் வளர்ச்சிக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் அதீத முதலீடே முக்கியக் காரணமாக விளங்கியது.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி
இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 216.27 புள்ளிகள் உயர்ந்து 33,462.97 புள்ளிகளை அடைந்துள்ளது. அதேபோல் நிஃப்டி குறியீடு 81.75 புள்ளிகள் உயர்ந்து 10,333.25 புள்ளிகளை அடைந்தது.
முக்கிய நிறுவனங்கள்
மும்பை பங்குச்சந்தையின் எஸ் அண்ட் பி கீழ் இருக்கும் டாப் 30 நிறுவனங்களில் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, கோல் இந்தியா ஆகிய நிறுவனங்கள் 3 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை அடைந்தது.


Click it and Unblock the Notifications