ஜூலை மாதம் முழுவதும் பட்டையை கிளப்பி வந்த மும்பை பங்குச்சந்தை, ஆகஸ்ட் மாதம் துவக்கம் முதல் மந்தமான வர்த்தகம் மட்டுமே பெற்று வருகிறது. இதற்கு முக்கியமான காரணம் அமெரிக்கா மட்டும் வட கொரியா நாடுகள் மத்தியில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் தான்.
இதன் எதிரொலி அமெமரிக்க சந்தையை மட்டும் அல்லாமல் ஆசியா, ஐரோப்பியா என சர்வதே சந்தையையும் பாதித்தது.
செபி
இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி வர்த்தகத்திற்கு தடைசெய்யப்பட்ட நிறுவனங்களை ஆய்வு செய்ய துவங்கியுள்ளது. இதனால் இன்று காலை வர்த்தகம் துவங்கும்போது மந்தமான வர்த்தகத்தையே பெற்று வந்தது.
ஆசிய சந்தை
மேலும் இன்று ஆசிய சந்தையிலும் நிலையான வர்த்தகத்தை பெற்று சரிவில் இருந்து மீண்ட காரணத்தால் இந்திய பங்குச்சந்தை அதிகளவிலான முதலீட்டையும் வர்த்தகத்தையும் பெற்றது.
முதலீட்டாளர்
கடந்த 15 நாட்களின் முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையில் இழந்த பணத்தை திரும்பப்பெற வேண்டும் என்ற காரணத்தால் அனைத்து முன்னணி நிறுவனங்களிலும் முதலீடு செய்தனர். இதன் காரணமாகவே 11 மணியளவில் சென்செக்ஸ் குறியீடு உயர்வடைய துவங்கியது.
மும்பை பங்குச்சந்தை
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 321.86 புள்ளிகள் உயர்ந்து 31,770.89 புள்ளிகளை அடைந்தது. நிஃப்டி குறியீடு 103.15 புள்ளிகள் உயர்ந்து 9,897.30 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.


Click it and Unblock the Notifications