புதன்கிழமை காலையில் முன்னாள் மத்திய அமைச்சர் அகமத் காலமானர் இதனால் பட்ஜெட் தாக்கல் செய்ய எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்புகளையும் தாண்டி நிதியமைச்சர் அருண் ஜேட்லி 2017-18 நிதி
மும்பை: புதன்கிழமை காலையில் முன்னாள் மத்திய அமைச்சர் அகமத் காலமானர் இதனால் பட்ஜெட் தாக்கல் செய்ய எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்புகளையும் தாண்டி நிதியமைச்சர் அருண் ஜேட்லி 2017-18 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை வெற்றிகரமாகத் தாக்கல் செய்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிக்கையைப் பணமதிப்பிழப்புக்குப் பின் அறிவிக்கப்பட்ட ஒன்று. இதனால் இந்திய மக்களும், வர்த்தகச் சந்தைக்கும் மிக முக்கியமான ஒன்றாக விளங்குகிறது.
இதன் காரணமாகச் சென்செக்ஸ் குறியீடு 490 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது.

தனிநபர்..
அருண் ஜேட்லி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிக்கையில், 2.5 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரையிலான தனிநபர் வருமானத்திற்கு 50 சதவீத வரி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுமானம்
நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமையும் உள்கட்டப்மைப்பு மற்றும் கட்டுமான துறை வளர்ச்சிக்கு மட்டும் மத்திய அரசு சுமார் 3.96 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
வர்த்தகச் சந்தை
மேலும் 50 லட்சம் ரூபாய்க்குக் குறைவாக வருமான உடைய வர்த்தக நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய திட்டங்கள் சந்தை முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகச் சந்தையை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
சென்செக்ஸ்
வருமான வரி, கட்டுமான துறைக்கு நிதி ஒதுக்கீடு, வர்த்தக நிறுவனங்களுக்கு வரிச் சலுகை ஆகிய அறிவிப்புகள் இன்றைய வர்த்தகச் சந்தையை உச்சத்திற்குக் கொண்டு சென்றது.
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு ஒரே நாளில் 485.68 புள்ளிகள் உயர்ந்து 28,141.64 புள்ளிகளை அடைந்துள்ளது.
நிஃப்டி
மதியம் 1 மணி வரை பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்த நிஃப்டி குறியீடு வருமான வரி அறிவிப்பிற்குப் பின் தொடர் உயர்வை அடைந்தது.
வர்த்தக முடிவில் நிஃப்டி குறியீடு 155.10 புள்ளிகள் உயர்ந்து 8,716.40 புள்ளிகள் உயர்ந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications