சென்செக்ஸ் 1 லட்சத்தை எட்டும்... அடிச்சு சொல்லும் மோர்கன் ஸ்டான்லி

தொடர்ந்து 6 மாதங்களாக சரிவை சந்தித்து வந்த இந்திய பங்குச் சந்தைகள். கடந்த ஏப்ரல் முதல் சரிவிலிருந்து படிப்படியாக மீண்டு வருகின்றன. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் தற்போது 81,500 புள்ளிகளுக்கு மேல் உள்ளது. பங்குச் சந்தையின் இருண்ட காலம் முடிந்து விட்டது, இனி பங்குச் சந்தைகள் தொடர்ந்து ஏற்றம் காணும் என்று பல்வேறு தரப்பினரும் நம்பிக்கையுடன் உள்ளனர்.

நம்பிக்கை
இந்நிலையில் அவர்களின் நம்பிக்கைக்கு வலுசேர்க்கும் வகையில், சர்வதேச தரகு நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் ஒரு புதிய தகவலை தெரிவித்துள்ளது. அடுத்த 12 மாதங்களில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1 லட்சம் புள்ளிகளை எட்ட வாய்ப்புள்ளது என்று மோர்கன் ஸ்டான்லி கணித்துள்ளது.

சென்செக்ஸ் 1 லட்சத்தை எட்டும்... அடிச்சு சொல்லும் மோர்கன் ஸ்டான்லி

மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் சென்செக்ஸ் இலக்கை உயர்த்தியுள்ளது. சராசரி அடிப்படையில், 2026 ஜூன் மாதத்துக்குள் சென்செக்ஸ் இலக்கு 89,000 புள்ளிகளாக நிர்ணயித்துள்ளது. வலுவான உள்நாட்டு உற்பத்தி, அமெரிக்காவில் மெதுவான வளா்ச்சி ஆனால் மந்தநிலை இல்லை, நல்ல கச்சா எண்ணெய் விலை போன்றவற்றை யூகித்து, சென்செக்ஸ் 89,000 புள்ளிகளை தொட 50 வாய்புள்ளதாக தரகு நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், ஏற்ற அடிப்படையில், இதே காலத்தில் சென்செக்ஸ் 1 லட்சத்தை எட்ட 30 சதவீதம் வாய்ப்புள்ளது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

வருவாய் மதிப்பீடு
மோர்கன் ஸ்டான்லி நிறுவனத்தின் ஈக்விட்டி மூலோபாய நிபுணர் ரிதம் தேசாய் கூறுகையில், 2026 ஜூனுக்கான புதிய சென்செக்ஸ் இலக்கான 89,000 (8 சதவீதம் உயர்வு) எங்கள் புதிய வருவாய் மதிப்பீடுகளில் பிரதிபலிக்கிறது. மேலும் 2025 டிசம்பர் இலக்கான 82,000-லிருந்து முன்னோக்கி நகர்த்தப்படுகிறது. இந்த நிலை, சென்செக்ஸ் 25 ஆண்டு சராசரியான 21xஐ விட 23.5x பின்தங்கிய பி/இ மடங்குகளில் வர்த்தகமாகும். என்பதை குறிக்கிறது.

எங்கள் அடிப்படை விஷயத்தில், ஒரு நல்ல இந்திய அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்பார்க்கிறோம். வட்டி விகிதங்களில் மேலும் 0.50 சதவீதம் குறைப்பு மற்றும் பணவியல் கொள்கைக்கான அடிப்படை நிகழ்வாக நேர்மறையான பணப்புழக்க சூழலை கருதுகிறோம்.

அடுத்த 12 மாதங்களில் சென்செக்ஸ் 1 லட்சத்தை எட்ட, கச்சா எண்ணெய் விலை 65 டாலருக்கு கீழே இருக்க வேண்டும், ஜிஎஸ்டி விகிதங்களை குறைக்க வேண்டும் மற்றும் வேளாண் சட்டங்களில் முன்னேற்றம் தேவை. இதுதவிர, 19 சதவீத சிஏஜிஆர் வருவாய் வளர்ச்சி மற்றும் சர்வதேச வர்த்தக போரிலிருந்து நிவாரணம் தேவை.

போர்ட்ஃபோலியோ
எங்களிடம் உள்ள 2000ம் ஆண்டு முதல் உள்ள தரவுகளை பார்க்கும்போது, அன்னிய முதலீட்டாளர்களின் போர்ட்ஃபோலியோ நிலைப்பாடு மிகவும் பலவீனமாக உள்ளது. மேலும் இந்தியா குறித்த அவர்களின் பார்வை மாறி வருவதற்கான அறிகுறிகள் உள்ளன என்று தெரிவித்தார்.

மீண்டும் களைகட்டும் ஐபிஓ சந்தை.. செபியிடம் மலை போல் குவியும் ஐபிஓ ஆவணங்கள்..!!
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+