சாதிக்க பொறந்தவன்டா இந்த சக்கரபாண்டி.. சென்செக்ஸ் 80000.. இந்த 20 பங்குகளை வாங்கியிருந்தால் ஜாக்பாட்

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. புதன்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் 80,000 புள்ளிகளை தொட்டு முதல் முறையாக புதிய உயரத்தைத் தொட்டது. டிசம்பர் மாதம் மத்தியில் 70,000 புள்ளிகளில் வர்த்தகமான சென்செக்ஸ் இன்று 10,000 புள்ளிகளை அதிகரித்து 80,000 புள்ளிகளை தொட்டு வரலாற்று உச்சத்தைத் தொட்டு உள்ளது.

சென்செக்ஸ் வெறும் 139 நாட்களில் 10000 புள்ளிகள் உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டு உள்ளது, இந்த காலகட்டத்தில் பங்குச் சந்தையில் உள்ள டாப் 500 நிறுவனங்களில் (BSE500) 20 நிறுவனங்களின் பங்குகள் பல மடங்கு உயர்ந்து Multibaggers பங்குகளாகத் தரம் உயர்ந்துள்ளது.

சாதிக்க பொறந்தவன்டா இந்த சக்கரபாண்டி.. சென்செக்ஸ் 80000.. இந்த 20 பங்குகளை வாங்கியிருந்தால் ஜாக்பாட்

இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 545.35 புள்ளிகள் அதிகரித்து 79,986.80 புள்ளிகளை எட்டியுள்ளது, இதேபோல் நிஃப்டி குறியீடு 162.65 புள்ளிகள் உயர்ந்து 24,286.50 புள்ளிகளை அடைந்து புதன்கிழமை வர்த்தகம் முடிந்தது. சென்செக்ஸ் 80000 புள்ளிகளை தக்க வைத்துக்கொள்ள முடியாதது பெரும் சோகமாகும்.

பங்குச் சந்தை தரவுகளின் படி சென்செக்ஸ் முதன் முதலில் 10,000 புள்ளிகளை 2006 ஆம் ஆண்டு பிப்ரவரியில் தொட்டது. அடுத்த 10,000 புள்ளிகளை எட்டுவதற்கு 2,318 நாட்கள் பின்பு ஏப்ரல் 2017ல் தொட்டது.

30,000 லிருந்து 40,000 ஐ அடைய சென்செக்ஸ் 520 நாட்கள் எடுத்துக் கொண்டது. மேலும் 416 நாட்களில் 50,000 என்ற இலக்கை எட்டியது. வெறும் 158 நாட்களில் 60,000 ஐ தொட்டது, இது இரண்டாவது வேகமான பயணமாகும். அடுத்த 10,000 புள்ளி உயர்வுக்கு 548 நாட்கள் ஆகின, தற்போது வெறும் 139 நாட்களில் 10000 புள்ளிகளை அதிகரித்து 80000 புள்ளிகளை தொட்டு உள்ளது.

16 வருடங்களுக்கு முன்பு அமெரிக்கப் பங்குச்சந்தை பெரும் சரிவை சந்திக்க காரணமாக இருந்த முன்னணி வங்கியான லேமென் பிரதர்ஸ் திவாலான போது, சென்செக்ஸ் 8,800 என்ற அளவில் இருந்தது. இந்த நிலையில் 70,000 புள்ளிகளில் இருந்து 80,000 புள்ளிகள் பயணத்தில் Multibagger பங்குகளின் பட்டியலை இப்போது பார்ப்போம்.

சென்செக்ஸ் 70,000 லிருந்து 80,000 ஆக உயர்ந்த பயணத்தில் குறைந்தது 20 பங்குகள் பல மடங்கு லாபம் (multibagger returns) கொடுத்தன. இந்த பட்டியலில் பொதுத்துறை நிறுவனப் பங்குகளில் பொதுத்துறை பங்குகள் பெரும் ஆதிக்கம் செலுத்துகின்றன.

கொச்சின் ஷிப்யார்டு (254%), ஹட்கோ (205%), பாரத் டைனமிக்ஸ் (135%), ஆர்.வி.என்.எல் (131%) மற்றும் ஆயில் இந்தியா (128%) ஆகியவை பொதுத்துறை நிறுவனங்கள் பட்டியலில் அடங்கும்.

இதை தொடர்ந்து ஹிடாச்சி எனர்ஜி, ஓஎஃப்எஸ், Schneider Electric Infrastructure, அமர் ராஜா எனர்ஜி & மொபிலிட்டி, ஜூபிடர் வேகன்ஸ், ஐஆர்எஃப்சி, டிவிஎஸ் ஹோல்டிங்க்ஸ் மற்றும் மசாகான் டாக் ஷிப்பில்டர்ஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகளும் இந்த பட்டியலில் உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+