செவ்வாய்க்கிழமை இந்தியப் பங்குச்சந்தை மீண்டும் வரலாற்று உச்சத்தைத் தொட்டு புதிய சாதனை படைத்தது.
குறிப்பாகச் சீனாவின் முடிவுகளால் உலோகப் பங்குகளின் ஏற்றம், சீனாவில் ரியல் எஸ்டேட் டெவலப்பர்களை ஆதரிக்கும் சீனாவின் முடிவிற்குப் பிறகு சரிவில் இருந்த சீனா மற்றும் ஹாங்காங் சந்தை இன்று மீண்ட காரணத்தால் ஒட்டுமொத்த ஆசிய சந்தையும் கலகலவென இருக்கிறது.
சீன மக்கள் வரலாறு காணாத வகையில் போராட்டம் நடத்திய நிலையில் நேற்று சீனா மற்றும் ஹாங்காங் சந்தைகள் சரிவுகள் இருந்தது, இதன் எதிரொலியாக அமெரிக்கச் சந்தையும் சரிவில் மாட்டிக்கொண்டது. ஆனால் மும்பை பங்குச்சந்தையில் இரண்டு குறியீடுகளும் திங்கட்கிழமையும் உச்சத்தை எட்டியது.
இந்த நிலையில் இன்றைய காலை வர்த்தகத்திலேயே சென்செக்ஸ் 62849.28 புள்ளிகளையும், நிஃப்டி 18,662.60 புள்ளிகளையும் தொட்டு உச்சத்தை அடைந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் சீனாவின் முடிவுகளால் உலோகப் பங்குகள் மற்றும் ரியல் எஸ்டேட் பங்குகள் உயர்ந்ததைத் தொடர்ந்து நிஃப்டி மெட்டல் குறியீடு இன்று காலை வர்த்தகத்தில் 1 சதவீதம் அதிகரித்துள்ளது. நேற்றைய வர்த்தகத்தில் சீன கமாடிட்டி சந்தையைப் போலவே இந்திய கமாட்டி சந்தையிலும் பெரும் பாதிப்பை முதலீட்டாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.
கச்சா எண்ணெய் விலை
இந்திய நிறுவனங்களுக்குக் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட சரிவும் மூலம் போக்குவரத்து மற்றும் எரிபொருளை சார்ந்து இயங்கும் முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் உயர்வுடன் உள்ளது. இதேபோல் சீனா பட்டியலிடப்பட்ட சொத்து நிறுவனங்களுக்கான ஈக்விட்டி மறுநிதியளிப்பு மீதான தடையைச் சீனா நீக்கியது சீன முதலீட்டாளர்கள் மத்தியில் முக்கியமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது.
ஆசிய சந்தை
இதன் மூலம் செவ்வாயன்று ஆசிய சந்தைகள் பலவீனமான தொடக்கத்தில் இருந்தாலும் MSCI ஆசியாவின் ஜப்பான் குறியீடு 1.81% உயர்ந்தது. அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் திங்களன்று சரிந்தன. சீனாவில் COVID கட்டுப்பாடுகள் மீதானா மக்கள் போராட்டம், இதைத் தொடர்ந்து அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ்-ன் எதிர்கால விகித உயர்வு பாதையில் ஏதேனும் மாற்றம் இருக்குமா என்ற கேள்வி மூலம் சரிவைச் சந்தித்துள்ளது.
மும்பை பங்குச்சந்தை
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையில் காலை முதல் தொடர்ந்து உயர்வுடன் இருக்கும் சென்செக்ஸ் 313.52 புள்ளிகள் வரையில் உயர்ந்து 62,818.32 புள்ளிகளை எட்டியுள்ளது. இதே வளர்ச்சி தொடர்ந்தால் டிசம்பர் 9 ஆம் தேதிக்குள் சென்செக்ஸ் 65000 புள்ளிகளை எட்டிவிடும். ஆனால் அமெரிக்க வட்டி விகத உயர்வை எப்படிச் சமாளிக்கப் போகிறது என்பது தான் முக்கியமான கேள்வியாக உள்ளது.
அமெரிக்கப் பெடரல் ரிசர்வ்
அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் வங்கி கடந்த வாரம் வட்டி விகித உயர்வை எப்படிச் செய்யப்போகிறது என்ற ஆலோசனை கூட்டத்தில் மிதமான வேகத்திலேயே வட்டியை உயர்த்த திட்டமிட்டு உள்ளதாகத் தெரிவித்தது. ஆனால் சீனாவின் கொரோனா தொற்று மற்றும் மக்கள் போராட்டம் ஆகிய இரண்டும் அமெரிக்கப் பெடரல் வங்கி தனது முடிவை மாற்ற தூண்டியுள்ளது என்றால் மிகையில்லை.
சீனா
சீனாவில் தினமும் 35000 முதல் 40000 பேருக்குக் கொரோனா தொற்றுப் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையில் மக்கள் போராட்டம் எனக் கொரோனா தொற்று எண்ணிக்கையை அதிகரிக்கும் என்பதால் ஜீரோ கோவிட் கொள்கையைக் கைவிட முடியாத நிலையில் தான் சீனா உள்ளது. இது தொடர்ந்து சீனா பொருளாதாரம், உற்பத்தி, வேலைவாய்ப்பு அகிய அனைத்தும் பாதிக்கப்படும். இதனால் சீனாவை நம்பியிருக்கும் அனைத்து நாடுகளும் நேரடியாகவோ, மறைமுகமாகவே பாதிக்கப்படும்.
டாப் 30 நிறுவனங்கள்
மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடின் டாப் 30 நிறுவனங்களில் இண்டஸ்இந்த வங்கி, பவர்கிரிட், எல் அண்ட் டி, பஜாஜ் பின்சர்வ், ஏசியன் பெயின்ட்ஸ், மாருதி சுசூகி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை சரிவில் உள்ளது. மேலும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் அதிகப்படியாக 3.13 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து டைட்டன், நெஸ்லே, ஐடிசி, ஐசிஐசிஐ வங்கி, டாடா ஸ்டீல், டாக்டர் ரெட்டி பங்குகள் உயர்வுடன் உள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications