இந்திய பங்குச் சந்தை இன்று வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது, காலை வர்த்தகம் துவங்கியது முதல் உயர்வில் இருந்து சென்செக்ஸ் மதியம் 1000 புள்ளிகள் மேல் சரிந்தது பலரையும் பீதியில் ஆழ்த்தியது. ஆனால் வர்த்தகம் முடியும் நேரத்திற்குள் மொத்த சரிவையும் மீண்டு வந்து புதிய உச்சத்தை எட்டியது மூலம் இந்தியப் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் வரையில் சம்பாதித்துள்ளனர்.
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 84,694.46 என்ற புதிய உச்சத்தை எட்டிய பின்னர், 84,544.31 என்ற நிலையில் முடிவடைந்தது. இது நேற்றைய வர்த்தக முடிவை ஒப்பிடும் போது சுமார் 1,359 புள்ளிகள் அதிகரித்துள்ளது. நிஃப்டி 50, 375.15 புள்ளிகள் அல்லது 1.48% அதிகரித்து 25,790.95 என்ற நிலையில் முடிந்தது.

இன்று மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட அனைத்து நிறுவனப் பங்குகளின் மொத்த சந்தை மூலதனம் ரூ.5.5 லட்சம் கோடி உயர்ந்து ரூ.471 லட்சம் கோடிக்கு எகிறியது. இன்றைய வர்த்தக உயர்வுக்கு அமெரிக்கச் சந்தை முதலீட்டாளர்களும், வங்கி பங்குகளும் தான் முக்கிய காரணமாக அமைந்தது.
இன்றைய பங்குச்சந்தை உயர்வுக்கு ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஹெச்டிஎப்சி வங்கி ஆகியவை இரண்டு பங்குகளும் தான் சாதனை நிலைகளில் மூட உதவியது. ICICI வங்கி மட்டும் NSE இல் ரூ. 1,362.35 என்ற புதிய 52 வார உயர்வை எட்டியது. HDFC வங்கி ரூ. 28.70 அல்லது 1.68% அதிகரித்து ரூ. 1,737.20 என்ற நிலையில் மூடப்பட்டது.
இந்த ஆண்டு பத்தாவது முறையாக, சென்செக்ஸ் குறியீடு 1,000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து முடிந்துள்ளது முக்கியமான சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
50 பங்குகள் கொண்ட நிஃப்டி குறியீட்டில், 44 பங்குகள் உயர்வுடன் முடிந்தது. இதில் அதிகம் லாபம் ஈட்டி நிறுவனங்கள் பட்டியிலில் முதல் இடத்தில் இருப்பது மஹிந்திரா & மஹிந்திரா (M&M), ஐடிஐசிஐ வங்கி, JSW ஸ்டீல், லார்சென் & டவுப்ரோ (L&T) மற்றும் கோல் இந்தியா ஆகியவையாகும். அதிகப்படியான சரிவை சந்தித்த நிறுவனங்கள் பட்டியலில் கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், ஸ்டேட் வங்கி ஆஃப் இந்தியா (SBI), NTPC, இந்துஸ்தான் வங்கி மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் ஆகியவை உள்ளது.
இதுவே துறை வாரியாக பார்க்கும் போது நிஃப்டி ஆட்டோ, நிஃப்டி வங்கி மற்றும் நிஃப்டி நிதி சேவைகள் 1.9%, 1.4% மற்றும் 1.6% உயர்வுடன் முடிந்தன. 16 நிஃப்டி துறை குறியீடுகளில் நிஃப்டி பொதுத்துறை வங்கி குறியீடு மட்டும் 0.1% சரிவுடன் முடிந்தது.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!



Click it and Unblock the Notifications