மும்பை பங்குச்சந்தை கடந்த வாரம் முதலீட்டாளர்களை கொண்டாட்டத்தின் உச்சத்திலேயே வைத்திருந்த நிலையில், இன்றும் இதே அதிரடியில் ஆட்டத்தை துவங்கியுள்ளது. இன்று காலை வர்த்தகம் துவங்கி சில நிமிடத்திலேயே சென்செக்ஸ் 65168.02 என்று புதிய வரலாற்று உச்சத்தை தொட்டு அசத்த்யுள்ளது.
இந்திய பங்குச்சந்தையின் உயர்வுக்கு முதலும் முக்கியமான காரணம் சற்றும் எதிர்பாராத விதமாக அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்பட்டு உள்ள உயர்வு தான். 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அமெரிக்க பொருளாதாரம் ரெசிஷன் அச்சத்தையும் தாண்டி ஜிடிபியில் 2 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

இதேபோல் வேலைவாய்ப்பு பிரிவிலும் முதலீட்ட சந்தைக்கு சாதகமான அறிவிப்புகள் வந்த காரணத்தால் ரெசிஷன் அச்சம் வேகமாக மறைந்துள்ளது. இதன் எதிரொலியாக பிற முதலீட்டு சந்தையில் இருந்து அதிகப்படியான முதலீடுகள் வெளியேறி தற்போது பங்குச்சந்தைக்கு திரும்பியுள்ளது.
2023 ஆம் ஆண்டு துவக்கம் முதல் இந்திய சந்தை மீதான கணிப்புகள் பெரிய அளவிலான மதிப்பை உருவாக்கிய நிலையில், அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்பட்டு உள்ள தாக்கம் இந்திய சந்தைக்கு சாதகமாக அமைந்துள்ளது. கடந்த வார துவக்கத்தில் இருந்து மும்பை பங்குச்சந்தையில் இருந்து அதிகப்படியான முதலீடுளை வெளிநாட்டு சந்தையில் இருந்து பெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை வர்த்தகம் துவக்கம் முதல் உயர்வுடன் காணப்படும் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 65232.64 புள்ளிகளை எட்டி வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது. இன்றும் ஐடி நிறுவன பங்குகள் உயர்வுடன் காணப்படுகிறது. இதேபோல் தேசிய பங்குச்சந்தையில் 130 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்து 19,318 என்ற வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது.
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 486.49 புள்ளிகள் உயர்ந்து 65,205.05 புள்ளிகளை எட்டியுள்ளது. இன்றைய வர்த்தகத்தில் அதிகப்படியாக 65,300.35 புள்ளிகளை அடைந்தது புதிய வரலாற்று உச்சத்தை அடைந்தது.
சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐடிசி, பஜாஜ் பைனான்ஸ், எஸ்பிஐ, ஹெச்டிஎப்சி, அல்டராடெக், என்டிபிசி, ஹெச்டிஎப்சி வங்கி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்கள் 1 சதவீதத்திற்கும் அதிகமான உயர்வுடன் உள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் பவர்கிரிட் அதிகப்படியாக டாப் 30 நிறுவனங்களில் 1.86 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. இதை தொடர்ந்து சன் பார்மா, மாருதி சுசூகி, எல் அண்ட் டி, டிசிஎஸ், நெஸ்லே, டெக் மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ், ஆக்சிஸ் வங்கி, டைட்டன் ஆகியவை சரிவுடன் முடிவடைந்துள்ளது.
இன்றைய வர்த்தக முடிவில் நிஃப்டி குறியீடு 133.50 புள்ளிகள் உயர்ந்து 19,322.55 புள்ளிகளை எட்டியுள்ளது. நிஃப்டியில் ஆட்டோமொபைல், ஐடி, பார்மா, ஹெல்த்கேர், கன்ஸ்யூமர் டியூரப்பிள் ஆகிய துறை சார்ந்த குறியீடுகள் சரிவுடன் உள்ளது. நிஃப்டி குறியீடு 19,345.10 புள்ளிகள் வரையில் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications